ஒட்டிக்கொள்ளும் புன்சிரிப்பு

0
691
75b8b01589dac97a840f25b96c261e3a-500b0628

 

 

புன்னகைச்சாரல்
பூவைவிட மென்மையாக
பாலைவிட வெண்மையாக
உள்ளத்தை நனைத்தே
உயிர்மூச்சுடன்
உறவாடிப்போகும், ,

அகத்தின் அன்பையும்
முகத்தின் பண்பையும்
தாங்கும்,
இரண்டங்குலப் புன்னகை
அது…

பகலில்கூட பயமுறுத்தும்
சிடு மூஞ்சிகளே
உங்கள் தாழ்வுச்சிக்கலால்
வசீகரிக்கும் ஆயுதமென
புன்னகையை
குறைசொல்லித் திரியாதீர்கள்…

வெளிப்பூச்சு அழகி(கர்)களே
உங்கள் வேஷம்
புன்னகையின்
சிறுநேரப் பழக்கத்தில்
காணாமல் போகலாம்
இல்லை,
ஒதுங்கிக் கொள்ளலாம்

ஓ மனித விகாரங்களே
இந்த ஆரோக்கியத் தொற்று
உங்களையும்
விரைவாகத் தொற்றிக்கொள்ளும்
முடிந்தால்
ஒழிந்து கொள்ளுங்கள்

சிரிப்பைக் கொன்றுதின்ன
குழி தோண்டும்
கூறுகெட்ட குப்பர்களே!!
ஓடிப்போங்கள்!!!

தனித் தீவில் வாழும்
நீங்கள்
உறவுவின் அற்புதத்தையும்
புன்னகையெனும் மருந்து பற்றியும்
எப்படி அறிந்திருப்பீர்கள்??

இனியும்
காலம்தாழ்த்தாது
சிரித்துப் பாருங்கள்
ஒட்டிக்கொள்ளும் சிரிப்பில்
உங்கள்
இதயக் கொந்தளிப்புகள்
இல்லாது போய்விடும்….

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments