கருமை மேனி,
ஒழுங்கற்ற உடல்,
ஒட்டியுலர்ந்த கன்னம்,
வெளித்தள்ளிய கண்கள்,
முன் தள்ளிய பற்கள்
அத்தனை அழகுடையாள்
ஒதுக்கப்பட்ட பெண்….
வீணான
வெள்ளை மனசு…
உதவாத
உதவும் குணம்…
ஏளனமான
இளகிய நெஞ்சம்…
அத்தனையும் கொண்டவள்
ஒதுக்கப்பட்ட பெண்….
சாயல்களில்
இல்லை…
சாதனைகளில்
உண்டு….
என்றெண்ணி வாழ்பவள்
ஒதுக்கப்பட்ட பெண்….
அழகில்லா
காரணத்தில்
சீதனச் சிறைக்குள்
சிக்கி
இல்லற வாழ்வில்
இன்னல் காண்பவள்
ஒதுக்கப்பட்ட பெண்….
மனது மட்டும் போதும்
என்றவரின் காலங்கள்
எல்லாம்
மலையேறிப் போச்சு…
வெறும் அழகு மட்டும்
வேணும்
என்றெண்ணும் காலம்
கொடியேறி நிற்கு…
முகப்பூச்சும்,
உதட்டுச் சாயமும்,
கண் மையும்
கொண்ட
மானிடப் படைப்பு
அழகாகி,
இயற்கையில் உருவான
இறைவனின் படைப்பு
ஒதுக்கப்பட்டு விட்டது….
அழகின் அர்த்தம்
புரியா பாரில்
மன அழகையுடையாள்
என்றுமே
ஒதுக்கப்பட்ட பெண் தான்….