கடந்து போ !! – அவையாவும் குரல்களே!!

0
662
images - 2021-10-12T005819.745-3b0bbbe9

அபயம்

“அண்ணா!! காப்பாதுங்க”
குரல் வந்த திசையை நோக்கி ஓடினான்.
அந்த ஆள் அரவமற்ற சாலையில், அவன் காதலியின் இறுக்க கைப்பிடியில் இருந்து அவனை தானே விடுவித்துக்கொண்டு!
அங்கே நடக்கவிருந்த வன்கொடுமையை தடுக்கும் பொருட்டு தாக்கியதில் அந்த ஆண் மரணிகின்றான், பெண் காப்பாற்றபடுகிறாள்!!

அந்த பெண்ணின் குரல் முன்னணியான காரணத்தினால் அவனது வாழ்வின் பின்னணியில் பல குரல்கள்!

ஓலம்

காதலியின் குரலில்..

“என்னடா பண்ணிட்ட நீ ?? நம்ம வாழ்க்க இப்ப நாசமா போச்சே !! ஒரு நிமிசம் யோசிச்சியா??

சலிப்பு

“ஹீரோயிசம் நெனச்சி பண்ண பொய் போட்டு தள்ளிட்டான் இந்த பையன்” – முதல் தகவல் அறிக்கையை பதிவிட்ட காவலரின் குரல் – சலிப்பின் சமிங்கனையாக!

ஒப்பாரி

“டேய் நீ நல்லா இருக்க மாட்ட டா, நாசமா பூடுவ டா !! என் மவன அநியாயமா கொன்னுட்டியே டா!!
உனக்கு எவன் டா ஜாமின் குடுத்தது?
டேய் ..என அவன் மேல் மன்னை வாரி தூற்றியது அந்த இறந்த ஆணின் தாயின் கைகள்!! ஒப்பாரி குரலெடுக்க!

ஆற்றாமை

“எங்க எது நடந்தா நமக்கெனன்னனு போக வேண்டியது தான!
ஜெயிலுக்கு போய்ட்டு வந்தவன் கூட என் பொண்ணுக்கு கல்யாணம் நடக்காது,போங்க எல்லாரும் வெளிய!

என அவன் காதலியின் பெற்றவர்கள் குரலில் கடுகடுதனர்!!

தெளிவு

“எனக்கு நடந்திருந்தாலும் அவன் இதையே தான் செஞ்சிருப்பான். என்னால அவன தூக்கி ஏறிய முடியாது, வேணும்னா உங்களை தூக்கி ஏறியிறேன்” என்றாள் அவளது பெற்றோரை நோக்கி,அவனது காதலி அவனுக்கு மனைவியாகும் சிலதருணங்கள் முன்,அவளது குரலில் தெளிவாக!!

தட்டிக்கழி

“கேஸ் இன்னும் நிலுவையில் இருக்க நீங்க இங்க பணி தொடர முடியாது”

“உங்களுக்கு ஏன் அந்த வேலை போச்சு??

“மன்னிக்கணும் உங்களுக்கு இந்த வேலை குடுக்க…

என பல நேர்காணல்களும் ; நேரவிராயங்களும் ஒரே குரலில்
“மத்தவங்களுக்கு இல்லாத அக்கற உங்களுக்கு என்?? என தட்டி கழித்த தருணங்கள்!!

மிரட்டல்

“டேய் நீ ஜாமின் ல வெளிய வந்துடலாம் , ஆனா எங்க கிட்ட இருந்து தப்ப முடியாது” என பல எதிர்முனை குரல்கள் மிராடல்களாக,
அது யார் எவர் என அவன் அறியப்படவில்லை, அறியமுற்படவுமில்லை!!

இயலாமை

“தம்பி நீங்க என் மவள காப்பத்துனீங்க,அத நாங்க உயிர் உள்ள வர மறக்க மாட்டோம் தம்பி, ஆன உங்களுக்குகாக போலீஸ் ஸ்டேஷன் கோர்ட்டுனு சாட்சி சொல்ல வந்தா,மிச்ச மீதி மானம் பத்திரிகைலயும் , டிவிலயும் போட்டு காட்ட போய்டும் தம்பி,
எங்கள விட்டுருங்க தம்பி” என கை கூப்பி தன் இயலாமையை வெளிப்படுத்தியது அந்த தந்தையின் குரல்!!

உறுதி

சில வருடங்கள் கழித்து ” அண்ணா எங்க அப்பா எதோ என்ன நெனச்சி அன்னிக்கி அப்படி பேசிட்டார், நீங்க இல்லனா நான் இன்னைக்கு உயிரோடவே இருந்திருக்க மாட்டேன், நான் வரேன் அண்ணா உங்களுக்கு சாட்சி சொல்ல” என்றது அந்த பெண்ணின் உறுதியான குரல்!!

தன்மை

“தம்பி, என் பொண்ணு பெரிய மனுஷியாகி நின்னப்பதான் ஒரு பொட்ட புள்ளையா பெத்தவளா யோசிச்சேன்,என் மவன் பண்ண பாவத்துக்கு அவன் செத்தது சரிதான், இனி எங்களால உங்களுக்கு எந்த தொந்தரவும் வராது” என அந்த அன்னையின் ஒப்பாரி சாப குரல் தன்மையானது!!

நெகிழ்ச்சி

“எப்படியோ தம்பி உங்க கேஸ் இன்னிக்கி முடிவுக்கு வந்துடுச்சு. இதுக்காக எத்தன படி ஏறி.. எறங்கி.. வேல போய் ….நிம்மதி போய்…எதோ அன்னிக்கி கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம்.. எது எப்படியோ இனி உங்களுக்கு நல்ல காலம்தான் !! என்ற அந்த கான்ஸ்டபிள் குரலில் ஒரு நெகிழ்ச்சி.

இன்று..

வார விடுமுறை தினம்

நினைவுகளின் வல்லமை அவனை தூக்கத்தில் இருந்து எழுப்பியது. ஆறு வருடங்களுக்கு முன் அவன் தொலைத்த யாவும் அவனுடன் இன்று பயணித்தது.
வேலை ..சமுதாயத்தில் மதிப்பு..நிம்மதி ..உரக்கம் என..

முன் இரவு கடக்க ..மனைவி மகளுடன்..தெரு வழியே நடந்து கொண்டிருந்தான் மனைவியும் மகளும் அவனது கைகளை இறுக பற்றிக்கொண்டடிருக்க..

அபயம் மீண்டும்

“அப்பா !! காப்பதுங்க” என்ற குரல் ஒலிக்க..அந்த திசையை நோக்கி திரும்பினான்.

அவன் கையை இறுக பற்றிய அவன் மனைவி “போலாம் வா!! நாம இழந்தது எல்லாம் போதும், கடந்து போ அதான் வாழ்க்க.. என கூறிகொண்டிருக்கும் போதே…

அவளின் கையில் இருந்த பற்றை விலக்கி அவன் கையை விடுவித்தாள் அவனது ஐந்து வயது மகள்!!

“அப்பா!! போப்பா , அந்த அக்காக்கு எதோ பிராப்ளம் போல என்னானு போய் பாருப்பா!! என்றாள் தைரியமாக!!

கடந்து போ – முன் கேட்ட குரல்களை – ஏனென்றால் அவையாவும் குரல்களே!!

மகளின் குரல் தைரியமாக ஒலிக்க முன் சென்றான் அபய குரலின் திசை நோக்கி!!

– தினேஷ் ஜாக்குலின்

முந்தைய கட்டுரைகுறியீட்டு காதல் …
அடுத்த கட்டுரைகாதல் ரசிகன்
தினேஷ் ஜாக்குலின்
"கொரோனா டயரீஸ்" வானொலி காலத்தில் பிறந்த நாம் இன்று காணொளி காலத்தை கடந்து கொண்டு இருக்கின்றோம் இயற்கை ஒரு சிறந்த ஆசானாய் நம் முன் மீண்டும் ஒரு விஸ்வரூபம் எடுத்து பாடங்கள் கற்றுக்கொடுத்து கொண்டு இருக்கிறது….ஒரு நுண் கிருமியின் வாயிலாக!! "மாற்றம் ஒன்றுதான் மாறாதது – மகனே" நோடிபொழுதும் சக மனிதனையும், மனிதத்தையும் மதிகாதவனாய் சுற்றித்திரிந்து வந்தோம். ஆனால் நாம் மறந்த மனிதத்தையும் ; சகமனிதனையும் உற்று நோக்க வைத்திருக்கிறது இந்த கிருமி. அதுவும் அது கடக இயலாத முககவசத்தையும் தாண்டி. அப்படி பல மனிதர்களை நாம் கண்டிருப்போம்,அவர்களை பற்றி கேட்டிருப்போம்,சிந்தித்திருபோம். அவ்வாறு நான் கண்டும்,கேட்டும்,சிந்தித்த மனிதர்களை பற்றிய தொகுப்பு தான் இந்த "கொரோனா டியரிஸ்" இதற்கு ஏன் இந்த பெயர் ?? என்ன காரணம்?? என கேட்கலாம்… இந்த "லாக் டவுன் " காலத்தில் தான் நான் கடந்த அத்தகைய மனிதர்களை எண்ணத்தில் அசைபோடவைத்து , உள்ளதில் பசை போடவைத்தது இந்த "கொரோனா" இனி பக்கங்கள் விரியும்,என் எண்ண ஓட்டத்தில் ஆனால் உங்கள் காட்சி மற்றும் குரல் மொழியில்.. – தினேஷ் ஜாக்குலின்-
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments