கடுப்பு!

0
1057

இரவு 2.30 இருக்கும்..!

அப்பதான், ஒரு 1.30 a.m போல night ward rounds முடிச்சி, Investigation எல்லாம் எழுதி, புது பேஷண்ட்ஸ் எல்லாம் கிளார்க் பண்ணி முடிச்சி, Acute patients எல்லாம் செக் பண்ணிட்டு, நம்ம பேர்சனல் கடலையையும் வறுத்து முடிச்சிட்டு, அக்கடான்னு கட்டில்ல விழுந்து, கண்ணயர்ந்து போய், கனவுல தமன்னா என்றி ஆகுற டைம்..

டொக் டொக் டொக்.. கதவு தட்டப்படுது!
“டொக்டர் பேஷண்ட் எக்கக் ஆவா” : நேர்ஸ்!!

உடனே ஐம்புலனும் அலார்ட் ஆகி, ஒரு எமர்ஜென்சிக்கு ரெடியா போய் பாத்தா, ஒரு ஆச்சி வார்ட்ட சுத்திப் பாத்திட்டு இருக்காவு!
(சிங்களத்தில் நடந்த உரையாடல் தமிழில்)

ஆச்சி, என்ன பிரச்சனை?

கடுப்பு டொக்டர்..

( என்ன நம்ம மைண்ட் வாயிஸ ஆச்சி கட்ச் பண்ணிட்டோ என்ற டவுட்டோட) என்னது? கடுப்பா?

ஓம் டொக்டர், முழங்கால் ரெண்டும் விருவிரெண்டு கடுக்குது!

எத்தின நாளா!?

இப்ப ஒரு நாலு வரிசமா கடுக்குது டொக்டர்..

(நாலு வரிசமாவா…!!!!:-! :-! :-! ) ஏதும் அடிகிடி பட்டதா..

கிணத்தடில சறுக்கி விழுந்து, தலையில அடிபட்டது, அதுக்கு பொறகுதான் இந்த நோவு தொடங்கினது!

(இதென்ன அவுட் ஒஃப் சிலபஸ் ஆ இருக்கு! மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப் போடுற எண்ட்றது இதானோ!) சரி ஆச்சி, நடக்க ஏலுமா?

பஸ் ஸ்டாண்டில இருந்து நடந்து தான் டொக்டர் வாறன்.. ஓட்டோக்காரனுக்கு 200/= எதுக்கு தண்டம்!

(இதுல மட்டும் வெவரமா இருங்க) சரி சரி, இவ்வளவு காலமும் இருந்து போட்டு இந்த நேரங்கெட்ட நேரத்துல எதுக்கு வந்த நீங்க? ஆறுதலா காலைல வந்திருக்கலாமே!!

இல்ல ஐயா, மச்சாள்ட கலியாணத்துக்கு வந்தன், பஸ்ஸ விட்டுட்டன்! பக்கத்துல தானே ஆஸ்பத்திரி , அப்பிடியே கால் கடுப்பயும் காட்டிட்டு, காலையில போகலாமே எண்டு வந்தன்..

( அடிப்பாவி, உங்கட டைம் மனேஜ்மெண்டுக்கு எண்ட நித்திர தானா கெடச்சுது. இதென்ன ஆஸ்பத்திரியா இல்லாட்டி இலவச லொட்ஜா..!! இப்பிடியெல்லாமா நம்மள யூஸ் பண்ராய்ங்க.. அவ்வ்வ்வ்)

என்ன செய்ற, அட்மிட் பண்ணி , paracetamol ரெண்டு குடுத்துட்டு, நானும் ரெண்டு போட்டுட்டு…
ம்ம் தமன்னா போச்சே..!!!!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments