கடைசி நொடி பகுதி 3

0
36
Screenshot_20250224_063405_Google

நாட்கள் நகர்கின்றன சஹானாவின் கேள்விகளுக்கு பதில் கிடைக்கவேயில்லை.அன்று இரவு முழுவதும் அவளுக்கு தூக்கமே வரவில்லை எவ்வளவு தூங்க முயன்றும் ஒரு நொடி கூட கண்ணை மூட முடியவில்லை அந்தப் பெண்ணின் அலறல் இன்னும் அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.யாரிடம் சொல்வதென்றே புரியவில்லை.

பொழுது விடிந்தது அவசர அவசரமாக வேலைக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தவள் பறபறப்பாக எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.திடீரென எதையோ பார்த்தவள் அதிர்ச்சியில் உறைந்து போய் சிலை போல நின்று கொண்டிருந்தாள்.அவளது தோழி அவளை உலுக்கி “ஏய் என்னாச்சி அங்க என்ன இருக்குனு அதையே வெறிச்சு பார்த்துட்டு இருக்க டூர் முடிஞ்ச நாள்ள இருந்து நானும் பார்க்குறன் உன்னோட நடவடிக்கை எதுவுமே சரியா இல்ல டைம் ஆச்சி வா” என கூறியவள் வேக வேகமாக சஹானாவை இழுத்துக் கொண்டு வண்டியில் ஏறி இருவருமாக வேலைக்குச் சென்றனர்.

ஆனாலும் அவளது கவனம் முழுக்க வேலையில் இருக்வில்லை.அதனால் வழமையை விட அதிகமாகவே திட்டு வாங்கி விட்டாள்.இருந்தும் எதனையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

நேரம் இப்பொழுது இரவு 7 மணி தாண்டிக் கொண்டிருந்தது.வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவள் மீண்டும் எதையோ பார்த்து உறைந்து நின்றாள்.அங்கே அவள் பார்த்தது இரத்தக் கரையுடனான வெள்ளைத்துணி இரத்தம் சொட்ட சொட்ட தொங்கிக் கொண்டிருந்தது.உடனே வீட்டை வீட்டு வெளியே ஓடி வந்தவள் வண்டி ஒன்றில் ஏறி  காட்டுப்பாதையை நோக்கி  சென்றாள்.இரவு நேரம் என்பதை கூட மறந்து காட்டிற்குள் நுழைந்தவள் அக்கட்டிடம் இருக்கும் திசையை நோக்கி ஓடினாள்.மீண்டும் மனித நடமாட்டமே இல்லாத அக்காட்டின் நடுவே அக்கட்டிடம் எந்தவித மின்விளக்குகளோ,வெளிச்சமோ இன்றி இருளினாள் சூழப்பட்டு இருக்கிறது.தைரியத்தை வரவைத்து கொண்டு உள்ளே கால் எடுத்து வைக்கிறாள்.அதே அலறல் சத்தம்,எல்லா திசையிலிருந்தும் அவளது காதுகளை அச்சத்தங்கள் நெருங்கிக் கொண்டிருந்தன.அச்சத்தங்கள் முழுதாக அவளை மூடும் பொழுது அவளது தைரியமும் கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் கரைந்து கொண்டிருந்தன.பயம் அவளை மொத்தமாக சூழ்ந்து கொள்ள இருளிள் அவளது கண்கள் மட்டும் பயத்தின் உச்சத்தில் பிரகாசித்தது.திடீரென அவளது வலப்புறத்தில் இருந்து சட்டென்று ஏதோ அவளது வாயை இருக்கி இழுத்தது…

தொடரும்…….

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments