துள்ளி எழுந்தாள், ஆமாம் அவள் கண்ட அத்தனை காட்சிகளும் கனவு. வியர்வை அருவி போல் அவள் உடலில் இருந்து ஓடிக்கொண்டிருந்தது.கட்டிலை விட்டு இறங்கி வந்து பயத்துடன் அவளது அலுமாரியை களைத்துக் கொண்டிருந்தாள், ஏதோ ஒன்றை தேடி; அப்படி நடுநிசியில் எதை தேடுகிறாள்? பல மணி நேரங்கள் கடந்தது அவள் தேடிய பொருள் கிடைக்கவேயில்லை.
சஹானாவிற்கு ஒவ்வொரு நாளும் நரகமாக மாறியது.அவள் நிம்மதியாக தூங்கி பல நாட்கள் ஆகிவிட்டது.
பொழுதும் புலர்ந்தது வழக்கம் போல வேலைக்குச் சென்றாள்,வேலையில் கவனத்தைச் செலுத்த முடியவில்லை இதனால் மேனேஜரிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறாள்.அவளுக்கு அது பழக்கப்பட்ட ஒன்றாகவே மாறிவிட்டது.
முன்னாடி இருந்தது போல இப்போதெல்லாம் நோர்மலாக சஹானாவினால் இருக்க முடியவில்லை.யாருடனும் பேசுவது கிடையாது இதனாலேயே அவளுக்கும் நண்பர்களுக்குமான இடைவெளி அதிகரித்தது.இப்பொழுதெல்லாம் அவள் எல்லோருடனும் எரிந்து மட்டுமே விழுந்தாள்.
எந்த சுற்றுலா அவளது சந்தோஷத்திற்கு தொடக்கமாக இருக்குமென நினைத்தாளோ அதே சுற்றுலாதான் அவளது வாழ்க்கையில் எதிர்பாராத பல திருப்பங்களை நிகழ்த்தி விட்டது.
ஒரு பக்கம் அந்த மர்மங்களுக்கான விடையையும் மறு பக்கம் தன் வாழ்க்கைக்கான அர்த்தத்தையும் தேடி ஓடலானாள்.
அன்று சன்டேய் (sunday) விடுமுறை தினம்,சஹானா வீட்டினை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள்.தேவையற்ற பொருள்களை எல்லாம் பரண் மேல்வைப்பதற்காக மேலே சென்றாள் அங்கே அவள் பல நாட்களாக தேடிய பொருள் இருந்தது.அதைத் தேடிதான் முழு அலுமாரியையும் களைத்திருப்பாள்.அது ஒரு டயரி.அந்த டயரியில் என்ன எழுதி இருந்தது? அது யாருக்கு சொந்தமான டயரி?
எதற்கு அதை சஹானா பல நாட்களாக தேடினாள்??
–தொடரும்…..-