கண்ணாடி

0
612
f5877a35-c2f9-4638-acd8-fe8570570a831665398242716GoldOvalMirror1-1599ee62

நீ ஒரு முட்டாள், யாருக்குமே உன்னை பிடிக்காது. உன் நண்பர்களுக்கு கூட உன்னைய பிடிக்காது” ,இவ்வாறு பாரதி வேறு ஒருவரை திட்டவில்லை தன்னைத் தானே கண்ணாடி முன்னால் நின்று திட்டிக் கொண்டாள்!! ஆரம்பத்திலிருந்தே பாரதி அவளது வாழ்க்கையில் துன்பத்தை தவிர வேறு ஒன்றும் பார்க்கவில்லை ,குறிப்பாக சொல்லி வேண்டும் என்றால் அவளது தாய், தந்தை இருவரும் அவள் சிறுபிள்ளையாக இருக்கும் போதே இறந்து விட்டார்கள். மேலும் பாரதி அவளது சித்தி வீட்டில்தான் வளர்ந்தாள்.
ஆனால் அவள் துரதிஷ்டம் அவளை பின் தொடர்ந்து , அதற்கு எடுத்துக்காட்டாக அவளது சித்தி அவளுக்கு பல கொடுமைகள் செய்தாள். மேலும், பாரதியின் நண்பர்களுக்கும் அவளை பிடிக்கவில்லை. காரணம் அவளுக்கு தூரெட் நோய் இருந்தது தூரெட் நோய்க்குறியீடு அல்லது தொரட் கூட்டறிகுறி (Tourette syndrome) என்பது குழந்தைப் பருவத்திலேயே தொடங்கும் ஒரு மரபுவழி
சார்ந்த நரம்பியல் மனநல சீர்கேடு ஆகும். இது பல உடல் இயக்கம் சார்ந்த நடுக்கங்களையும் குறைந்தபட்சம் ஒரு குரல் ஒலி சார்ந்த நடுக்கத்தையும் வெளிப்படுத்தும் தன்மையுடையதாகும். இதனால் அவளது வாழ்க்கை முழுவதும் எல்லோரும் அவளை
வெறுத்தனர்.

இப்படி பல காரணங்களால் பாரதிக்கு தன் மேல் உள்ள சுய அன்பு குறைந்தது ,தினமும் கண்ணாடி முன் நின்று தன்னைத்தானே திட்டிக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தாள். நாட்கள் செல்ல செல்ல அவளது சித்தியின் கொடுமைகளும் அதிகரித்தது
தினமும் எதற்காவது அவளது சித்தி அவளை திட்டித் தீர்த்துக் கொண்டே இருந்தார்கள், அப்படித்தான் ஒருநாள் பூச்சாடியை பாரதி உடைத்து விட்டாள். இதற்காக அவரது சித்தி மூன்று நாட்கள் அவளுக்கு சாப்பாடு வழங்கவில்லை உடனே பாரதியும் அவளது
கோபத்தை வழக்கம் போபோலவே கண்ணாடி முன் நின்று தீர்த்துக் கொண்டாள் , பாரதி தனக்கு தானே பேசத் தொடங்கினாள், “ஒரு பூச்சாடியை கூட கவனமா பாத்துக்க முடியலையா? உன்னால தேவையில்லாம அத உடைச்சு, மூன்று நாள் பசியில இருக்க வேண்டியதாச்சு!! தேவையா இது?”, இவ்வாறு அவள் தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.

நெடு நாட்களாகவே பாரதிக்கு வினோதன் என்கின்ற தன்னுடன் படிக்கும் சக மாணவன் மீது ஈர்ப்பு காணப்பட்டது. இதனால் வினோதனுடன் நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்புக்காக பாரதி காத்துக் கொண்டிருந்தாள் , ஒருவழியாக அந்த வாய்ப்பும் அவளுக்கு கிட்டியது .குழு செயற்பாட்டிற்காக இருவரும் இணைந்தனர் இறுதியில் இருவரும் இணைந்தது குழு செயற்பாட்டையும் சிறப்பாக செய்து முடித்தனர் , அனைத்தும் முடிந்து இருவரும் பிரியும் நேரத்தில் பாரதி ஒரு விடயத்தை உணர்ந்தாள். இதைவிட்டால் வேறு ஒரு நல்ல சந்தர்ப்பம் நெருங்கிப் பழகுவதற்கு கிடைக்காது என்பதுதான் அது , ஆகையால் அவனுடன் பேச முற்பட்டாள் , ஆனாலும் அவள் துரதிஷ்டம் அவளை பின்தொடர்ந்தது , அவள் சரியாக பேச முயற்சிக்கும் போது தூரெட் நோயிற்கான அறிகுறிகள் தென்பட்டன , இதனால் வினோதன் பயந்து அவளுடன் பேசாமல் போய்விட்டான். ஒரு வழியாக அனைத்து இன்னல்களும் முடிந்து பாரதி வீட்டிற்கு வந்தாள். ஆனால் அவள் பெரும் கோபத்துடன் காணப்பட்டாள் , வழமை போல அவள் தன் மேலே கோபப்பட்டாள். கோபத்தை கண்ணாடி முன் நின்று ,”நீ ஒரு துரதிர்ஷ்டசாலி, சரியா எல்லாம் அமையிற நேரத்துல இப்படி நடந்தது.

நீ எதுக்குமே லாயக்கில்ல “,என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாள். ஆனால் பாரதிக்கு தெரியாத ஒரு விடயம் கண்ணாடி உலகில் காணப்படும் அவளது பிம்பத்திற்கு இதற்குமேல் பொறுமை கிடையாது என்று அதனால் அந்த கண்ணாடி உலகில் உள்ள பாரதியின் பிம்பம் பேசத் தொடங்கியது ,”நிறுத்து இதுக்கு மேல என்னால முடியாது! நீ பேசுறத பொறுத்திட்டு இருக்க முடியாது “இந்த வார்த்தைகளை கூறிக்கொண்டே ஒரு மாயத்தை நிகழ்த்தியது அந்த பிம்பம். கண்ணாடி உலகில் காணப்பட்ட பாரதியின் பிம்பம் நிஜ உலகிற்கு மாறிவிட்டது ,அதேசமயம் நிஜ உலகில் காணப்பட்ட பாரதி கண்ணாடி உலகிற்குள் சென்றுவிட்டாள் பாரதி என்ன நடக்கின்றது என்பதை உணர்வதற்குள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது. நிஜ பாரதி பேச தொடங்கினாள், “என்ன நடக்குது? நீ யாரு ?நான் எப்படி கண்ணாடிக்குள் வந்தேன்?”பொறுமையாக பதில் சொல்லத் தொடங்கியது பாரதியின் பிம்பம், “நிஜ உலகில் இருந்த நீயும், கண்ணாடி உலகில் இருந்த நானும் இடம் மாறிவிட்டோம், நான் உனது பிம்பம் ,தினமும் உன் திட்ட
கேட்டுக்கொண்டு என்னால இருக்க முடியல! ஒவ்வொரு நாளும் நீ என்ன துரதிர்ஷ்டசாலி, திறமை இல்லாதவள் இப்படி நிறைய திட்டி இருக்கிற, உன்னால உன் மீதே அன்பு செலுத்த முடியல இதுல நீ மத்தவங்க உன் மேல் அன்பு செலுத்த வேண்டும் என்டு எதிர்பார்க்கிறது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!! இனிமேல் நான் உன் வாழ்க்கையை வாழப் போறேன் உன் வாழ்க்கையை எவ்வளவு அழகா வாழப் போறேன் என்பதை பொறுத்திருந்து பார்!!” ,இவ்வாறு பாரதியின் பிம்பம் பேசி முடித்தது.

பாரதிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை உடனடியாக அவளது பிம்பம் இடத்தில் பேச ஆரம்பித்தாள் “என்னை மன்னித்துக்கொள் நான் அப்படி திட்டி இருக்கக் கூடாது நான் இனிமேல் உன்னை திட்ட மாட்டேன். தயவுசெஞ்சு எண்ட நிஜ உலகத்திற்கே என்னை கொண்டு போய் விட்டுடு” அவளது பிம்பமும் இதற்கு விடை சொன்னது.

“இப்ப கூட நீ எனக்குதான் மன்னிப்பு கேட்கிறாய். ஆனா, உண்மைக்குமே நீ உனக்கு நீயே மன்னிப்பு கேட்கணும் ஏன் என்றால் நீ தினமும் வந்து கண்ணாடி முன் நின்று உன்னைத்தானே திட்டிக் கொள்கிறாய்” இவ்வாறு அவளது பிம்பம் பேசி முடித்தவுடன் பாரதிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை ஏனென்றால் அப்படிப்பட்ட ஒரு பதிலை பாரதி எதிர்பார்க்கவில்லை இருந்தாலும் இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்கு பாரதி மீண்டும் அவளின் பிம்பத்திடம் இருந்து தயவை எதிர்பார்த்தாள். ஆனால் அவளது பிம்பமோ அவளை புறக்கணித்துவிட்டு நிஜ உலக வாழ்க்கையை ரசிக்க போய்விட்டது.

நிஜ உலகில் பாரதியின பிம்பத்தை யாரும் சந்தேகப்படவில்லை. இதனால் மிக இலகுவாக பாரதியின் பிம்பம் அவளது வாழ்க்கையை வாழத் தொடங்கியது.. அவனது பிம்பம் நிஜ உலகில் வாழ தொடங்கியதுமே செய்த முதல் வேலை பாரதியின் சித்தியை எவ்வாறு சமாளிப்பது என்ற சிந்தனை செய்தது தான்,அவளின் யோசனை படியே தினமும் அவளது சித்தியிற்கு
பிடித்தமான விடயங்களை செய்ய தொடங்கியது பாரதியின் பிம்பம். அவருக்குப் பிடித்த உணவுகள் செய்து கொடுப்பது வீட்டு வேலைகளை சரிவர செய்வது இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பாரதியின் சித்தியை மாற்ற தொடங்கியது அவரது பிம்பம். நாளடைவில் பாரதியின் சித்தியும் அவர்களது கொடுமைகளை குறைக்க தொடங்கினார்கள், அவள் மீது அன்பு செலுத்தவில்லை என்றாலும் முன்புபோல் கொடுமைகள் செய்யவில்லை.

இதற்கு நடுவில் பாரதியின் பிம்பம் அடிக்கடி பாரதியிடம் பேசியது. அப்போது ,”நீ உன்ட சித்திய சமாளிக்கத் தெரியாமல் இருக்கிற. நான் அவங்கள எப்படியோ சமாளித்து விட்டேன் இப்ப அவங்க அன்பு செலுத்தவில்லை என்டாலும் கூட என்னைய தொல்லை பண்ணாம இருக்கிறாங்க ,நான்தான் சொன்னேனே உன் வாழ்க்கையை உன்னைய விட நான் நல்லா வாழ்றன் இனிமேலும் நல்லா வாழ போரன் “,இவ்வாறு பாரதியின் பிம்பம் பாரதி இடத்தில் கூறி முடித்தபின் பாரதிக்கு தான் எவ்வளவு தவறாக வாழ்க்கையை புரிந்து கொண்டுள்ளார் என்று புலப்பட்டது. பாரதியின் சித்தியை சமாளித்த பின்பு அடுத்ததாக அவளது
பிம்பம் அவளது பாடசாலை நண்பர்களை கவர்வதற்கான முயற்சியில் இறங்கியது. முடிந்த அளவிற்கு அனைவருக்கும் உதவி செய்தாள் அனைவருடனும் அன்பாக பேசினாள் நாட்கள் நகர நகர அனைவருக்குமே பாரதியின் பிம்பத்தை பிடிக்க தொடங்கிவிட்டது இன்னும் மிச்சம் இருப்பது தூரெட் நோய்தான், முடிந்த அளவிற்கு அதற்கான சிகிச்சைகளை செய்ய முயற்சித்தது பாரதியின் பிம்பம் மேலும் நிறைய வைத்தியர்களை பார்த்து மாற்று மாத்திரைகள் எடுத்துக்கொண்டது.

ஆனால், ஒரு அளவுக்கு மேல் அவளது நோய் கட்டுப்பாடு இல்லாமல் போனது, இருந்தாலும் பாரதியின் பிம்பம் முயற்சி செய்தது ஆனால் ஒரு நாள் இந்த அனைத்து முயற்சிகளுக்கும் தோல்வி ஏற்படுத்தும் முகமாக அந்த நோய் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. திடீரென்று தூ ரெட் நோயிற்கான அறிகுறிகள் தென்பட்டன ஆனால் இம்முறை யாரும் அவளை பார்த்து பயப்படவில்லை அதற்கு மாறாக அவளது சக நண்பர்கள் அவளை சுத்தி அவளை ஆசுவாசப்படுத்தினார்கள். நோயிற்கான அறிகுறி முடிந்தபின் ஒருவழியாக சாந்தமானது பாரதியின் பிம்பம் . பாரதியின் பிம்பம் அவளது சக நண்பர்களுடன் பேச தொடங்கியது, ”முன்னெல்லாம் நான் இந்த மாதிரி இருக்கேகுள்ள நீங்க எல்லாரும் என்ன பார்த்து பயந்து ஓடுவீங்க , ஆனா இப்ப எல்லாரும் எனக்கு உதவி செய்றீங்க ,இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன?”, இவ்வாறு அவரது சக நண்பர்களை பார்த்து கேட்டாள் அதற்குஅவரது நண்பர்கள் விடை சொல்ல ஆரம்பித்தனர்,” இதற்குக் காரணம் நீதான்! உன்னில் உள்ள மாற்றம்தான் !!முன்பெல்லாம் நீ எல்லாரோடையும் அவ்வளவு அன்பாய் இருக்க மாட்ட ஆனா இப்ப அப்படி இல்ல இருந்தாலும் உண்மைய சொல்லப்போனா எங்க மேலயும் தப்பு இருக்கு. நாங்க நீ கஷ்டப்படுவதை புரிந்துகொள்ளாமல் உன்னை ஒதுக்கி வச்சிட்டோம் அப்படி செஞ்சிருக்க கூடாது எங்களை மன்னிச்சு கொள் “, இவ்வாறு பதில் சொல்லி முடித்தவுடன் பாரதியின் பிம்பத்திற்கு திடீரென்று தான் தவறு செய்து விட்டோமோ என்று ஒரு சந்தேகம் எழுந்தது. மேலும் பாரதியின் பிம்பம் அவளது நண்பர்களுடன் பேசத் தொடங்கியது ,”அப்ப என்ன சொல்ல வாரீங்க. என் வாழ்க்கை இவ்வளவு காலம் நல்லா இல்லாததற்கு நான் மட்டும் இல்லையா? நீங்களும் காரணமா?,” அவரது நண்பர்கள் இந்தக் கேள்விக்கு தயங்கித் தயங்கி குற்ற உணர்ச்சியுடன் பதில் ன்னார்கள் ,”ஆமாம் பாரதி உன்மேல மட்டும் தவறில்லை எங்க மேலயும் தப்பு இருக்கு,” இவ்வாறு சொல்லி முடித்தனர்.

இதற்குப் பிறகு அமைதியாக யோசிக்க தொடங்கியது பாரதியின் பிம்பம் ,இவ்வளவு நாளாக பாரதியின் வாழ்க்கை நன்றாக அமையாததற்கு பாரதி மட்டும் தான் காரணம் என்று நினைத்துக் கொண்டிருந்த அவளது பிம்பம் ,இப்பொழுதுதான் அதற்கு அவளை சுற்றி உள்ளவர்களும் காரணம் என்பதை புரிந்து கொண்டது. தான் செய்வது தவறு என்பதை புரிந்து கொண்டது, மேலும் பாரதி அவளது வாழ்க்கையை நன்றாக வாழாததற்கு அவள் மட்டுமே காரணமாக இருந்தாலும் இப்படி இன்னொருவரது வாழ்க்கையை தான் வாழ்வது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை உணர்ந்து கொண்டது பாரதியின் பிம்பம், பின்னர் பாரதியிடம் சென்று பேசியது,” எப்படி இருக்கிற ?,”என்று கேள்வி கேட்டவுடன் பாரதி கோபப்பட்டாள்.அதற்கு பதிலும் சொன்னாள்,” என் வாழ்க்கையை நீ வாழ, நான் இந்த கண்ணாடி உலகத்துல மாட்டிக் கொண்டு இருக்குறன் , எப்படி இருக்கிறன்னு கேட்க்குற , வேற எப்படி நல்லாவே இல்ல ! எனக்கு இது பிடிக்கவே இல்லை, நீ செய்தது நியாயமா ?,”இவ்வாறு கேட்டவுடன் பாரதியின் பிம்பத்திற்கு அவள் செய்த தவறின் தார்ப்பர்யம் விளங்கியது.

விடை சொல்லத் தொடங்கியது பாரதியின் பிம்பம்,” நியாயமில்லதான் ! என்னை மன்னித்துக்கொள், என்னதான் இருந்தாலும் உன்ட வாழ்க்கையை நான் வாழனும் என்டு நினைச்சு இருக்கக்கூடாது, இனிமேலும் நீ இங்க கஷ்டப்பட தேவையில்லை!!,”
இவ்வாறு கூறியவுடன் பாரதியின் பிம்பம் மீண்டும் அந்த மாயத்தை நிகழ்த்தியது. பாரதி நிஜ உலகிலும் அவளது பிம்பம் கண்ணாடி உலகிலும் முன்புபோல வந்தனர். எல்லாம் சரியாக நடந்து விட்டது ! அதேசமயம் பாரதியின் பிம்பம் பேசத் தொடங்கியது ,”நான் இவ்வளவு நாளா உன் வாழ்க்கை வாழ்ந்ததால் ஒரு விஷயம் மட்டும் நல்லா புரிஞ்சது, நினைத்து இருந்தால் உன் வாழ்க்கையை நீ இன்னும் நல்லா வாழ்ந்து இருக்கலாம் சித்திக்கு உதவி செய்து , நண்பர்களிடம் அன்பாக இருக்குரது மாதிரி ஒரு சில விஷயங்கள் நீ செஞ்சாலே நீ நல்லா வாழலாம், திருப்பியும் நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்!,” இவ்வாறு பாரதியின் பிம்பம் பேசி முடித்தவுடன் பாரதியும் பேசத்தொடங்கினாள் ,”முதல்ல என்னை நிஜ உலகிற்கு திருப்பியும் அனுப்பியதற்கு நன்றி !அந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறேன், அதே சமயத்தில் நீ சொல்ற மாதிரி நான் இந்த வாழ்கைய நல்லா வாழ்ந்து இருக்கலாம் !!ஆனா அப்படி செய்யவில்லை, இனிமேல் நீ சொல்ற மாதிரியே வாழ முயற்சி செய்கிறேன், “ என்று பேசி முடித்தாள் ,ஒரு வழியாக அனைத்தும் இனிதே நிறைவுற்றது.

சுபம்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments