கொழுந்தெனச் சிரிக்கிறாள்
தேயிலைக் கொழுந்துடன் இருக்கிறாள்
அத்தனை ஏக்கத்தையும்
ஒரு புன்னகையில் மறைக்கிறாள்
மங்களகரமாய் இருக்கிறாள்
இந்த மண்ணையே தான் நேசிக்கிறாள்
துளித் துளியாய் வடியும் வியர்வையையும்
அட்டை குடித்து மீந்த குருதியையும்
தேயிலையில் சாறெனவே சேமிக்கிறாள்
விரிந்து கிடக்கும் தேயிலைச் செடிகளில்
தன் எதிர்காலத்தையும் விதைக்கிறாள்
பார்வையில் உள்ள பளபளப்பு
அவள் வாழ்க்கையில் வரும் நாள் தான் என்றோ?
Subscribe
Please login to comment
0 கருத்துரைகள்
Oldest