கம்பன் காட்டும் கவிதை வாழ்க்கை

0
641

இன்பம் பயக்கும் இனியவை தந்திடும்
துன்பம் அகலும் துணிவைக் காட்டிடும்
என்றும் வாழ்வில் ஏற்றம் பெருகிடும்
நன்று என்றே நாளும் கிடைத்திடும்
கம்பன் பாட்டில் கருத்து இருக்கும்
நம்மவர் வாழ்வை நவின்று சொல்லும்
மாந்தன் வாழ்வில் மலரும் வழியை
செந்தம் பந்தம் சொகுசய்தக் காணும்
பாட்டின் பொருளும் காட்டும் நிலையை
ஊட்டும் சொல்லில் உறைந்துக் கிடைக்கும்
ஏட்டில் தீட்டி ஏற்கும் பணியை
மூட்டும் முறையை முனைந்து முடிப்பர்
இசையில் அமைந்த இனியப் பாக்கள்
அசையா வண்ணம் ஆழ்ந்து நிற்கும்
மனதின் உள்ளே மலர்ந்து மகிழ்வில்
இனத்தின் உயர்வை இயைந்து வெல்லும்
விருந்துப் பாக்கள் விளைவில் தேய்ந்த
திருத்த மின்றி தீஞ்சுவை ஈந்து
தாளம் தப்பா தளிர்நடைக் காட்டி
கோலம் மிகுந்த கொடுமை தீர்க்கும்
பாத்திர படைப்பு மாந்தரின் வார்ப்பு
நேத்திர நோக்கில் நிலையாய் நிற்கும்
அறத்தைக் காக்கும் அன்பை வளர்க்கும்
நிறத்தை மிகுந்தும் நேரிய பாசம்
நெஞ்சில் ஊண்றி நினய யிருக்க
வஞ்சக வாழ்வை வடித்துப் பாட்டுப்
பொருளில் பாங்காய் பொருத்திப் கூட்டும்
சொற்களில் சுயத்தை சொகுசாய்க் காட்டி
கற்கும் மாந்தர் கற்பனை யழகில்
களித்து நிற்பார் கவிதைப் பாடுவார்
விளித்து வியந்து விரிவின் எல்லை
தமிழில் தந்தார்: தகைமை பெற்றார்
அமிழ்த வாழ்வினை அளந்துக் காட்டும்
கம்பன் கவிதைப் போல என்றும்
நம்பும் மாந்தர்க்கு நவிலும் அழகை
நம்பும் தந்திடும் தெளிவைக் காட்டிடும்
தெம்பும் தந்திடும்  தெளிவைக் காட்டிடும்
உம்பர் வாழ்வை உவந்திடும் வண்ணம்
உலகம் போற்றும் நிலையாய் நின்றே
வளமை வார்க்கும் வாழ்த்து செழிக்குமா!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments