தேவையான பொருட்கள்:
கம்பு – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
வெந்தயம் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- உழுத்தம் பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் வெந்தயம் சேர்க்கவும், அதனுடன் நீர் சேர்க்கவும்.
- பின்பு கம்பை வேறொரு பாத்திரத்தில் வைக்கவும் அதனுடன் நீர் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
- முதலில் உழுத்தம் பருப்பை மென்மையாக அரைத்துக் கொள்ளவும் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.
- பின்பு கம்பினையும் மென்மையாக அரைத்துக் கொள்ளவும் அதையும் அதே பாத்திரத்தில் ஊற்றி நன்கு கலக்கவும் அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- அதனை மூடி ஒரு இரவு முழுவதும் வைக்கவும் அதனை எடுத்து நன்கு கலக்கவும்.
- தோசைக்கல்லை சூடாக்கி, மெல்லிய தோசைகளாக ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.சுவையான கம்பு தோசை தயார்.
- டயட்டில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல டிபன்.
நன்மைகள்: மற்ற தானியங்களை விட கம்பு அதிக புரதசத்து மட்டுமல்லாது அமினோ அமிலங்களையும் அதிகம் பெற்று தரம் வாய்ந்ததாக விளங்குகிறது.