உயிரில் உயிராய் கலந்து
உன்னில் நான் வாழ்ந்த
உன்னத ஐயிரு மாதங்கள்
உண்மையில் நான் செய்த தவம்
உந்தன் வேதனை அறியாமல்
உள்ளூர நான் பெற்ற இன்பம் பல
உலகின் வறுமை தெரியாமல்
உன் உதிரத்தை உணவாக்கி,
உன்னில் ஓர் சுமையாகி,
உலகினை காண வந்து,
உன் சுமை குறைத்து,
உலகச் சுமை அதிகரித்தேன்!
ஆயினும்
உந்தன் மனமெனும் கோயிலில் என்றும்
உயரிய இடத்திலிருக்கும் அன்புச்சுமை யான்!
உன்னதமாய் நான் செய்த தவம் தான்
உன்னை என் அன்னையாக்கியது
உன்னில் அனைத்தும் அடக்கம்
என்பதால்தான்(நான்உட்பட)
உனக்குள் என் எண்ணம் சொன்னேன்.
உலகமதில் எந்த பிறப்பானாலும்
உந்தன் சிசுவாகவே பிறக்க வேண்டும்
Subscribe
Please login to comment
0 கருத்துரைகள்
Oldest