கரை கடந்த அலை கடல்..

0
1177

கடற்கரை மணலோரம்
கால்தடம் பதித்து நிற்போம்

கரையோர மணல்வழியே
தூபி ஒன்று எழுப்பிவைப்போம்

அடுக்கடுக்காய் வந்துநீயும்
அழகாய் அசைத்து செல்வாய்

கண்ணிமைக்குள் உனை வைத்தே
காலமெலாம் வாழ்ந்தோம்

கடல் எங்கள் அன்னை என்று
கவிபாடி நின்றோம்

உனை விட்டு ஒருநாளும்
ஒதுங்கி போகோம்

ஓர் நொடியில்
ஓங்கிநின்றாய் எம்தேச எல்லை

எம் உயிர் குடிக்க
உந்தனுக்குத் தூண்டியது யாரோ

எம் கால் தடம் அளித்த நீயும்
எம் தடம் அழித்தது ஏனோ

பல ஆண்டுகள் தூபிதனில் துவள்கிறோம்
உறவறுந்து உயிர்குடித்த உலகோடு சேர்ந்ததாலோ

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments