கர்ப்ப காலத்தின் போது பெண் தன் குழந்தைக்கும் சேர்த்து உணவு உண்கிறாள். அதனால் எந்த உணவு வழக்கமான நாட்களைவிட கர்ப்ப காலங்களில் பெண்கள் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். உதாரணமாக பாலில் கால்சியம் அதிகம் இருக்கிறது. ஆனாலும் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை அருந்துவது உகந்தது.
பயறு வகை உணவுகளை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு குமட்டல் அதிகம் இருக்கும் என்பதால் வாழைப்பழம் சாப்பிடுவது அதற்கு தீர்வை தரும்.
கர்ப்பிணிகள் டீ, காபி பருகுவதை தவிர்க்க வேண்டும். டீ மற்றும் காபியில் காபின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் காபி பருகக்கூடாது. வேண்டுமானால் குறைந்த அளவிற்கு டீ குடிக்கலாம். ஆனால் அதுவும் அதிகம் பருகுவது ஆபத்தானதாகும்.