கறிவேப்பிலை – மிளகு – பூண்டு குழம்பு

0
1452

தேவையான பொருட்கள்:

மிளகு – 4 டீ ஸ்பூன்

சீரகம் – 1 டீ ஸ்பூன்

மல்லி – 2 டீ ஸ்பூன் 

சின்ன வெங்காயம் – 10

தேங்காய் துருவல் – 3 டீ ஸ்பூன்

பெருங்காயம் – 1 டீ ஸ்பூன்

புளி – எலுமிச்சையளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

Curry leaf gravy
Curry leaf gravy

செய்முறை:

  • வாணலியில் எண்ணெய் விட்டு தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, அரைத்துக்கொள்ளவும். பூண்டினை தோல் உரித்து எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் புளிக்கரைசலை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் வதக்கிய பூண்டு சேர்த்து, அரைத்து வைத்ததையும் சேர்க்கவும்.
  • பூண்டு வெந்ததும், கடுகு – உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி இறக்கவும்.

நன்மைகள்:

  •  கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. 
  • கொழுப்புக்கள் கரையும்,இரத்த சோகை,சர்க்கரை நோய்,இதய நோய்,செரிமானம்,முடி வளர்ச்சி,சளித் தேக்கம்,கல்லீரல் பாதிப்பு, போன்றவைக்கு கருவேப்பிலை ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
  • கறிவேப்பிலையை தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments