கற்புடமை மாந்தர்க்கெல்லாம்

0
454
IMG_20210308_170629-89c163eb

 

 

 

 

ஏவாள் தொடங்கி என் அம்மா வரை          
பெண் உலகம் ஆண் சார்ந்தது தான்
சார்ந்ததினால் தான் சாகும் வரை வாழ்வில்லை

ஜான்சிராணியே ஆனாலும் போருக்கு பிள்ளையுடன் தான் போக வேண்டும் 
புதுமைப் பெண்ணையும் புதினம் என்று கூறலையே
புனிதமாகக் கருதும்- பூமி பெண்ணியத்தையும்
கண்ணியமாய் கூறச் சொல்லும்- உலகம்

ஸ்த்ரி திரியாயும் தீயாயும்  
எரிகிறாள்தான்
சீதை காலத்தில் இருந்து 
படிக்காமலே பல பட்டங்கள் 
இவள் உரித்து
உடுத்துக் களித்ததை விட உழைத்துக் கழித்ததே இங்கு அதிகம்
கடலில் முத்துக்கள் இருந்தாலும்  
உப்புக்களே அதிகம் 
இங்கும் கண்ணமாக்கள் இருந்தாலும் செல்லமாக்களே அதிகம்

நவ மங்கையவள்  இல்லறத்திலும் நல்லறம் செய்வாள்
நாசா  சென்றாலும்   நாகரிகம் காப்பாள்
கற்புடமை மாந்தரெல்லாம் காதலோடு கானல்நீராகாமல்
அறியாமை அகற்றி பெண்ணறம் பேணி அகிலம் ஆழ்வீராக!

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments