கற்பூரவல்லி (Coleus-aromaticos)

0
1497

மூலிகையின் பெயர்: கற்பூரவல்லி

வேறுபெயர்கள்: ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ்.

பயன்தரும் பாகங்கள்: தண்டு, இலைகள் ஆகியவை.

மருத்துவப் பயன்கள்: கற்பூரவல்லித் தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து. வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

பயன்படுத்தும் முறைகள்:

  • தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அலர்ஜிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவக் குணம் தரும்.
  • மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும்.
  • சிறுநீரை எளிதில் வெளிக்கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.

குழந்தைகளின் சளியைக்  கட்டுப்படுத்த:

  • குழந்தைக்குக் குடிப்பதற்காகக் கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து விடுங்கள்.
  • அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள். குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.
  • இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும்.
Coleus aromaticos (karpuravalli)

சீதள இருமல் தீரும்

இலைச் சாற்றை சர்க்கரைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க சீதள இருமல் தீரும்.

தலைவலி நீங்கும்

இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும். சூட்டைத் தணிக்கும்.

இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.

இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக்காய்ச்சல் போகும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments