கல்லூரி வாழ்க்கையின் இரண்டாம் பாகம்….!!!!

0
1136

இன்றுடன் இரண்டு வருடங்கள் ,
காத்திருப்புக்களே கடமையானது,
கல்வி முறை இணையமானது,
பேனா முனை தட்டச்சானது
எம் கலை எல்லாம் கலைந்து போனது
காற்றலையோடு…..

ஆயிரம் கதை பேசி ,
அடுக்கடுக்காய் உரையாடி
அத்தனை பேரும் ஒன்றிணைந்து
ஆற்றங்கரை ஓரத்திலே ,
ஆலமரக் காற்றுடனே,
ஆங்காங்கே இலை பறக்க
இன்னிசை பாடலோடு
இதமாக நாம் சேர்த்து
முதல் வருடம் நிறைவு செய்தோம்..

ஏப்ரல் மாதக் குழப்பத்தோடு
முகமூடி கழட்டப்பட்டு ,
கலர் கலராய் லெக்ச ஹோல் நிறைந்திருக்க ,
அடையாள அட்டைக்கு
அடிக்கொரு முறை வேளைவந்தது நுழைவாயிலில்.

அத்தோடு நின்றதா இல்லையே,
தொடர்ந்தும் மாற்றப்பட்டது  வகுப்பறை,
இணைய வசதி இழந்து
வெப்ப மண்டலம் புகுந்து
வேதனையில் சில காலம்,
தொழுகைக்காய் ஓடிப்போய்
விடுதியிலே விசாரணைக்காய் சில நிமிடம்…

சாப்பாட்டு நேரம் குறைக்கப்பட்டது
நேரசூசி நெருக்கப்பட்டது,
நிம்மதி இன்றி நிலைகுலைந்து போனோம்…
திடீரென்று வகுப்பறை எமக்கென்று மாற்றப்பட்டது
ஆனந்தம் கைகூட
அனைவரும் இணைந்து ஓடோடிப்போனோம்…

ஆண்டு பூராய் குழப்பத்தோடும்
சஞ்சலங்கள் பல கண்டு
ஏறாவூரிலே திருமண வைபகம்,
தோப்புக்கண்டத்திலே கூட்டாஞ்சோறு,
ஒரு நாள் கல்விச் சுற்றுலா என
பல வண்ணங்கள் படைத்தது இவ்வாண்டு..

நட்பு பலமானது
நண்பர்கள் பல மடங்கானது,
எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும்
இருமடங்கானது,
இருப்பினும், இணைந்து திரிந்தோம்
அடிக்கடி ஊர்சுற்றி கையும்களவுமாய் பிடிபட்டு,
தம்பிமாரிடம் மன்றாடிய தருணங்கள்…

மறந்து போன ஷாப்பிங்
வாடிக்கையான பென்ஞ்கள்,
அடிக்கடி போராட்டத்தோடு சிறுகடைகள்,
வயிறு நிறையப் பகல் உணவு,
கண்நிறைந்த தூக்கத்தோடு பாடவேளைகள்…..

பக்குவங்கள் பல கொண்டு
சுயநலம் மறந்து பொது நலம் புகுந்து
பொதுச்சேவை பல புரிந்து…
புதுப்புது குழுவோடு பாடவேளை பல கழிய,
ஆரம்பித்தது வியாபாரச் சந்தை குழப்பங்கள்,
கருத்தரங்கு பல கழிந்து
கருத்து பல முரண்பட்டு,
பேச்சாளர்கள் பல கொண்டு,
கடைசியில் காகிதத்தில் பெயர் குறித்து,
குழு பிரித்து ஒப்படைக்கப்பட்டது.

குழு பிரிந்து ,நாள் குறித்து,
வியாபார ரகசியங்கள் ஆங்காங்கே பேணப்பட்டு,
அறைவாசி வேளைகூட நிறைவுற்ற நேரத்திலே,
திடீரென்று நிறுத்தப்பட்டது
எம் அனைவரினதும்
மனம் நிறைந்த கனவுகளும்,
அரங்கேறக் காத்திருந்த முயற்சிகளும்….

இத்தனை பல இருந்தும்
பிரியாத வரத்தோடும் புதிரான அன்போடும்
எம் ஒற்றுமை மட்டும்,
அடிக்கடி நிலைகுலைந்தாலும்
இன்றுவரை நம் நட்பு தன் நிலையான
இடம் பதித்துள்ளது எம் அனைவர் உள்ளத்திலும்….

கால ஓட்டம் விரைவானது
அதனாலோ தெரியவில்லை
நம் இரண்டு வருடம் நிறைவுற்றது,
விடுமுறைகள் பல கொண்டு
கண்ணில் கலக்கத்தோடும்
மனதில் கவலையோடும்
நிறைவு செய்து விட்டோம் எம் கடந்தகாலத்தை..

மறுபடியும் புதுக்குழப்பத்தோடு
நம் நாடு மட்டுமல்ல
உலகே சீர்குலைந்த நிலையில் இன்று நாம்
பரவும் தொற்று நோய் காணாமல் போய்
பலபேர் கூடிச் சேர்ந்து வாழ  இறைவனைப் பிராத்திப்போம்….

விதிமுறைகள் மதித்திருந்து
எம் மிகுதிப்பயணம் தொடர்ந்திட
வீட்டோடு நாம் இருந்து
விரட்டியடிப்போம் இவ்வினோதமான நோயை…..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments