காட்டு ஷ்யாம்

0
542

 

 

 

மகாபாரதகக்தைகள் பல வடிவங்களில் பற்பல மொழிகலில் இந்துக்கள் மரபில் தொன்று தொட்டு இருந்துவருகின்றது. மகாபாரத கதாபாத்திரங்களில் இருவர் மிக முக்கியமானவர்கள். மகாபாரத பீமனின் பேரனும், கடோத்கஜனின் மகனுமான பார்பரிகன், காட்டு ஷியாம்ஜி என்ற பெயரால்  இன்றளவிலும் மக்களால் வழிபடப்படுகிறார். கடோத்கஜனிற்கும் யாதவ மன்னர் தைத்ய மூரின்மகளாகிய மௌரவியிக்கும் பிறந்தவர் காட்டு ஷியாம் என்கிற பார்பரிகன். இவரது பிற பெயர்கள் காட்டுநராஷ்ஜி, பாபா ஷியாம், காத்மாண்டுவில் ஆகாஷ் பைரவ், நேபாளில் யலம்பர், ஹாரே கா சகாரா, லக்தாதர் மற்றும் மௌரவிநந்தன்.  

இவருக்கு மகாபாரதத்தில் ஓர் முக்கிய பங்கு உண்டு. அக்கினிதேவன் ஷ்யாமிற்கு ஓர் இனத்தையே அழிக்கக்கூடிய திறனை உடைய , இலக்கைத் தாக்கிய பின், அம்புராத்தூளிக்கே  திரும்பவந்து சேர்ந்து விடும் மூன்று அம்புகளை வரமாக வழங்கினார்.  எனவேஇவர் மகாபாரதப்போரை ஒரு நொடியில் முடித்து, பகைவர்களை அழிக்கக்கூடிய சக்தியையும் வலிமையும் உடைய அம்புகளை கொண்டிருந்தார்.  இவரது கொள்கை தோல்வியுற்றவர் பக்கம் ஆதரவு கொடுத்தல் ஆகும். இக்காரணத்தால் அவர் கௌரவர்கள் சார்பாக போர் புரியும் நிலை வந்தது. 

ஓர் நாள் அவர் தனது குதிரையின் மேல் அமர்ந்து போர்க்களத்திற்கு பயணித்திருந்தார். அவ்வழியே கிருஷ்ணர்ஒரு பிராமண வேடத்தில் வந்து பார்பரிகனின் திட்டங்களை அறிய மற்றும் தனது வலிமையை ஆராய, குதிரையின் மேல் சவாரி செய்து கொண்டிருந்த பார்பாரிகனை நிறுத்தினார். பார்பரிகனிடம்குருக்ஷேத்திர யுத்தத்தை தானே முடிக்க எத்தனை காலம் ஆகுமென கேட்டபோது பார்பரிகன் ஒரு நொடி என்றுபதிலளித்தார். இவற்றை தவிர்க்க,பிராமண வேடத்தில் வந்த கிருஷ்ணர் ஒரே அம்பினால் அருகே இருந்த அரசமரத்தின் அனைத்து இலைகளையும் கட்டும்படி சவால் விட்டார்.கிருஷ்ணர் ஒரு இலையை தனது பாதத்தின் கீழ்மறைத்து வைத்திருந்தார்.பார்பரிகன் ஒரு பாணமெய்தார். அப்போது கிருஷ்ணர் ஒரு இலையை தனதுகாலடியில் மறைத்து வைத்தார் அது அந்த மரத்திலுள்ள அத்தனை இலைகளையும் இடம் குறியிட்ட பின்பிராமணனாக வேடமிட்டு வந்த கிருஷ்ணரின் பாதத்தின் அருகே சுற்றிக் கொண்டிருந்தது.  கிருஷ்ணர் ஏன்தனது காலருகே சுற்றிக் கொண்டு இருந்தது என்று பார்பரிகனிடம் கேட்டார். அவர் அவரது காலடியில் இலைமறைந்து இருக்கும் என்று பதிலளித்தார். பார்பரிகன் கிருஷ்ணர் தனது காலை நகர்த்தாவிட்டால் காலைதுளைத்து விடும் என்றார். கிருஷ்ணர் தனது காலை மேல் நோக்கி நகர்த்தினார். அந்த முதல் அம்பு அனைத்துஇலைகளையும் குறியிட்டு இணைத்தது. இப்போது கிருஷ்ணர் பார்பரிகனுடைய  பாணத்தின் சக்திகளையும்ஆற்றலையும் கண்டறிந்தார்.

பிறகு கிருஷ்ணர் ஒரு போருக்கு முன் ஓர் மிகவும் சக்திவாய்ந்த மற்றும்  வலிமையுடையவனின் தலைநன்கொடை அளிக்க வேண்டுமென பார்பரிகனிடம் கூறினார்.இதைக் கூறிய பிறகு கிருஷ்ணர்இக்களத்திலேயே மிக சக்திவாய்ந்த வலிமையுடையவன் பார்பரிகன்  என்றார். அவரது வாக்குறுதியைநிறைவேற்றுவதற்காகவும் கிருஷ்ணரின் வாக்குக்கு கட்டுப்பட்ட காரணத்தால் தனது தலையை தானம்அளித்தார். பார்பரிகன் தனது தலையை நன்கொடை செய்யும்முன் கிருஷ்ணரிடம் ஒரு வேண்டுகோள்கேட்டார்.பார்பரிகன் தனது தலையை நன்கொடை செய்தபின் வரவிருக்கும் போரை பார்க்கவேண்டும் எனக்கிருஷ்ணரிடம் கோரிட்டார்.  கிருஷ்ணரும் பார்பரிகனின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்கு அவரது தலையைஅருகே இருந்த ஒரு மலையின் உச்சியில் வைத்தார். பார்பரிகனால் குருக்ஷேத்திர போர், தொடக்கத்திலிருந்துமுடிவு வரை பார்க்கமுடிந்தது.

ஏராளமான ஆற்றலும் சக்தியும் இருந்தும் தன்னையே களப்பலியாக தந்ததால் அவர் பலசமூகங்களில் தெய்வமாக கருதி வழிபடப்படுகின்றார்.

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments