காண்டீபம்

0
1495

 

 

 

 

வில் என்பது வளைவான வடிவமுடைய, காற்றில் அம்புகளை எய்ய உதவும்சாதனம் ஆகும். வில்லின் இருமுனைகளின் இணைப்பை நாண் என்பர், நாணைபின்னிழுக்கும் போது வில்லின் முனைகள் வளைக்கப்படும். நாணைவிடுவிக்கையில், வளைக்கப்பட்டிருக்கும் கிளையின் நிலையாற்றல், அம்பின் திசைவேகமாக மாறும். வில்லும் அம்பும், இரண்டுமே ஒன்றாக இணைந்து, பயன்படுத்தபப்டும் ஆயுத அமைப்பாக உள்ளது. வில்லிலிருந்து அம்புகளை எய்யும்கலை அல்லது விளையாட்டு, வில்வித்தை எனப்படும்.

மகாபாரதத்திலிருந்து, பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனின் தெய்வீக வில் காண்டீபம் எனப்படுகின்றது, இவ்வில்பிரம்மனால் வடிவமைக்கப்பட்டது.காண்டவ பிரஸ்தத்தை அழிக்க நினைத்த அக்னிதேவன் அர்ஜுனனுக்கு வருணனிடமிருந்து பெற்றுக்க்கொடுத்த வில்லே காண்டீபம் என கருதப்படுகின்றது.காண்டீபவில்லை ஆயிரம் ஆண்டுகள் பிரம்மதேவன் வைத்திருந்தார். பிரஜாபதி 3,585ஆண்டுகளாக அதைப் பயன்படுத்தி, இந்திரனிடம் ஒப்படைத்தார். அடுத்து, சந்திரனிடம் 500 ஆண்டுகள், பிறகு வருணன் வசம் வந்தது. அவர் அதை 100 ஆண்டுகளாகப்பயன்படுத்தினார், பின்னர் அர்ஜுனன் பெற்றுக்கொண்டார். கண்தர்வ வனத்தை அழித்த வில்லான காண்டீபத்தை வைத்திருந்ததால் அர்ஜுனனுக்கு காண்டீபன் என்றும் ஒரு பெயருண்டு.

ஒரு லட்சம் வில்லின் சக்தியை உடைய அழிவே இல்லாத காண்டீபத்தைக் கைவிடக்கேட்கும் எவரையும் அழிக்கும் திறன், அர்ஜுனனுக்கு இருந்தது. நூற்றியெட்டு நாண்களுடன் நூற்றுக்கணக்கான தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த காண்டீபம், முடிவில்லாஅம்புகளை வழங்கும் இரு அம்புராத்தூளிகளைக் கொண்டது. காண்டீப வில்லை சாமானியர்கள் பிரயோகிக்க முடியாது. ஒவ்வொரு முறை வில்லில் இருந்து அம்பு புறப்படும் போதும், உரத்த இடியோசைபோல ஒலி எழும்பும். குருக்ஷேத்திர போர்முடிந்த பிறகு துவாபர யுகத்தின் முடிவில் அக்னியின் வேண்டுகோளுக்கிணங்கி மீண்டும் காண்டீபத்தை வருண பகவானிடமே சென்று சேரும்படி நீரில் இட்டார் அர்ஜுனன் என்று நம்பப்படுகின்றது.

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments