காதல்

1
744

 

 

 

 

ஒற்றை பார்வையில்
தொலைந்தேன்
இமைகள் மட்டும்
அசைய ஊமை மொழி
பேசும் காதல் சுமந்தேன்
பார்க்கமல் பேசாமல்
அவதியுறும்
காதல் நோய் பிடித்தேன்
இதயத்தில் புதிதாய்
அவள் தஞ்சம்
இடத்திற்கில்லை பஞ்சம் என்றேன்

விடியலே போராட்டம்
விடிந்ததும்
ஆவல் திண்டாட்டம்
என உலகம் மறந்தேன்.
திட்டி முறைப்பதில் தனி சுகம் கண்டேன்
அன்புதான் காதல் வசம்
ஆயுள் சிறை கொண்டேன்
ஆயிரம் உறவுகள்
அருகில் நான் தேடுவதோ
என் காதல் உறவு என்றேன்
பூக்களும் காதலின் சின்னம்
காதலும் நம் இருவரின்
கை வண்ணம் என்பேன்

முதல் முறை
முட்டி மோதியே காதல் ஈர்ப்புக் கொண்டேன்
வெட்கம் கொண்டு
தானாய் பேச கற்று
காதல் என்றறிந்தேன்
இன்பம் எதுவரையோ அதுவரை காதலும் துன்பம் என இன்றுதான் அறிந்தேன்
அவள் கைபிடித்து
நடக்கையில்
காதல் இன்னும் இனித்திடும் சுகம்
தேனும் கரும்பும் சுவைத்திட்ட இன்பம் தித்திக்குதே காதல் மோகம்
காதல் என் உயிர் உள்ளவரை நாம் வாழ்ந்திட போதும்

 

 

 

 

5 1 vote
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
அழகராஜ் பிரசாந்
அழகராஜ் பிரசாந்
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அருமையான காதல்கவி வரிகள்👌👌👌👌👌