சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல்,நிஜத்தின் சிதறலில் விழுந்திடும் சிறு துளி நிழல்கள்
நினைவுகளைத் தாண்டி கொண்டு செல்லும் நிலையில்லா நிழல்களில் சிக்கித் திணறும் சிறு விம்பமாய்,நினைவுகளை தேடி கனவுலகில் மிதக்கிறேன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
முழுதாக தொலைந்த பின் தான் தெரிந்தது நினைவுகளும் கிடைக்காது, திரும்பி செல்ல வழியும் பிறக்காது என்று
கனவுலகில் இன்றும் புதைந்தே கிடக்கிறேன். அவ்வப்போது ; தலைதூக்கி பார்க்கிறேன் உன் கனவுகளாக,ஏக்கத்துடன் என்னை கை தூக்கிவிட யாருமில்லை நீ கூட உதவ மாட்டியா? என்று;
என் தவிப்பை உணர முடிந்த உன்னால்,என் தவத்தை முறிக்க முடியவில்லையே:( மோட்சம் கேட்டு மன்றாடியவளாக அந் நாளுக்காய் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறேன்.