காளை (இந்தியா)

0
1747

காளை வகைகள்

அத்தக்கருப்பன்

அழுக்குமறையன்

அணறிகாலன்

ஆளைவெறிச்சான்

ஆனைச்சொறியன்

கட்டைக்காளை

கருமறையான்

கட்டைக்காரி

கட்டுக்கொம்பன்

கட்டைவால் கூளை

கருமறைக்காளை

கண்ணன் மயிலை

கத்திக்கொம்பன்

கள்ளக்காடன்

கள்ளக்காளை

செவலை எருது

செம்ம பறையன்

செந்தாழைவயிரன்

சொறியன்

தளப்பன்

தல்லயன்காளை

தறிகொம்பன்

துடைசேர்கூழை

கட்டைக்கொம்பன்

கருங்கூழை

கழற்வாய்வெறியன்

கழற்சிக்கண்ணன்

கருப்பன்

காரிக்காளை

காற்சிலம்பன்

காராம்பசு

குட்டைசெவியன்

குண்டுக்கண்ணன்

குட்டைநரம்பன்

குத்துக்குளம்பன்

குட்டைசெவியன்

குள்ளச்சிவப்பன்

கூழைவாலன்

தூங்கச்செழியன்

வட்டப்புல்லை

வட்டச்செவியன்

வளைக்கொம்பன்

வள்ளிக்கொம்பன்

வர்ணக்காளை

வட்டக்கரியன்

வெள்ளைக்காளை

கூடுகொம்பன்

கூழைசிவலை

கொட்டைப்பாக்கன்

கொண்டைத்தலையன்

ஏரிச்சுழியன்

ஏறுவாலன்

நாரைக்கழுத்தன்

நெட்டைக்கொம்பன்

நெட்டைக்காலன்

படப்பு பிடுங்கி

படலைக் கொம்பன்

பட்டிக்காளை

பனங்காய் மயிலை

பசுங்கழுத்தான்

பால்வெள்ளை

வெள்ளைக்குடும்பன்

வெள்ளைக்கண்ணன்

வெள்ளைப்போரான்

மயிலைக்காளை

வெள்ளை

கழுத்திகாபிள்ளை

கருக்காமயிலை

பணங்காரி

பொட்டைக்கண்ணன்

பொங்குவாயன்

போருக்காளை

மட்டைக் கொலம்பன்

மஞ்சள் வாலன்

மறைச்சிவலை

மஞ்சலி வாலன்

மஞ்ச மயிலை

மயிலை

மேகவண்ணன்

முறிகொம்பன்

முட்டிக்காலன்

முரிகாளை

சங்குவண்ணன்

செம்மறைக்காளை

சந்தனப்பிள்ளை

சர்ச்சி

சிந்துமாடு

செம்பூத்துக்காரி

செவலமாடு

நாட்டுமாடு

எருமைமாடு

காரிமாடு

  • காளைகள் இயல்பாக 4,000 முதல் 5,000 கிலோ எடையிலான வண்டிப் பாரத்தை இழுக்கும் திறன் கொண்டவை. கடுமையான காலநிலைக்கும், உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்பவும் தகவமைத்து வாழக்கூடியவை. எல்லாம் நன்றாக இருக்கும் சூழ்நிலையில் மட்டுமல்லாமல் கடுமையான வெயில், பஞ்சக் காலத்திலும் நொடித்துப் போகாமல் பனையோலை, எள்ளு சக்கை, கரும்புத் தோகை, வேப்பந்தழை எனக் கிடைப்பதைச் சாப்பிட்டு உயிர் வாழக்கூடியவை.

நம்ம ஊர் மாடுகள் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், அடுத்த கணம் நம் மனதில் தோன்றி மறைபவை துள்ளி ஓடும் காளைகளே. அவை எதுவும் சாதாரணக் காளைகள் அல்ல, கம்பீரப் பார்வையும் மேலெழுந்த திமிலுடனும் சிலிர்த்து நிற்கும் காங்கேயம் காளைகள். எந்தச் சந்தேகமும் இல்லாமல் காங்கேயம் காளை, நம் மண்ணின் பெருமிதம்தான்.

  • காங்கேயம் மட்டுமின்றி உம்பளச்சேரி, புளியகுளம், பர்கூர் மலை மாடு, தேனி மலை மாடு போன்றவையும் நம் மரபின் பெருமைகளைத் தூக்கிப் பிடிப்பவையே. தமிழ் மண்ணின் அடையாளமாகத் திகழ்ந்துவந்த ஆறு மரபார்ந்த மாட்டினங்களில் தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்த ஆலம்பாடி வகை மட்டும் இன்றைக்கு இல்லை, அற்றுப்போய்விட்டது.
  • மற்ற உள்ளூர் மாட்டினங்களின் நிலையும் மகிழ்ச்சியடைய வைக்கும் நிலையில் இல்லை. நம்முடைய மாட்டினங்கள் வேகமாக அழிந்துவருவதற்கு, அவற்றின் பெருமைகள் சரியாக உணரப்படாததே முக்கியக் காரணம்.
 

உள்ளூர் மாட்டினங்களின் இனப்பெருக்க நடைமுறைகளுள் ஒன்றான ஜல்லிக்கட்டு ஒருபுறம் கண்மூடித்தனமாக எதிர்க்கப்படுகிறது. மற்றொருபுறம் காலம்காலமாகக் கிடைத்துவந்த ஆதரவையும் பராமரிப்பையும் வேகமாக இழந்துவரும் உள்ளூர் மாட்டினங்கள் அழிவை நோக்கி நகர்ந்து வருகின்றன.

  • மாடுகளின் புகைப்படங்கள் போட்டு ரூபாய் நாணயங்கள் 1954 காலகட்டத்தில் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் இருந்துள்ளது.ஒரண்ணா, இரண்டனா போன்ற ரூபாய் நாணயங்களில் காளை மாடுகளின் புகைப்படங்களை அச்சட்டிக்கப்பட்டிருந்தன.ஒரு பக்கம் காளையின் படமும், மறு பக்கம் மூன்று தலை சிங்கத்தின் படமும் அதில் இருந்துள்ளது.இந்த நாணயங்கள் காலப்போக்கில் மறைந்து விட்டன.
முந்தைய கட்டுரைபூனை
அடுத்த கட்டுரைசிங்கம்
GOBIKRISHNA D
தொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments