கிராமம் என்றால்
இழிவில்லை
இயற்கையின் இருப்பிடம்
ஊஞ்சல் கட்டி ஆடும்
தென்றலில்
ஒவ்வொரு முறையும்
உறைந்து போகலாம்
பச்சை வயலுடுத்தும்
பாவாடையின் கரையில்
பகல் இரவாக
படுத்துறங்கலாம்
நிலவைக்கட்டி இழுத்து
திண்ணையின் மடியில்
அமரச் செய்து
சோறூட்டலாம்
பஞ்சு மெத்தையின் சுகத்தை
மணலில்
உருண்டு புரண்டு
உடல் முழுதும் அனுபவிக்கலாம்
வகை வகையாக வர்ணம்
பூசத் தேவையில்லை
வானவில் அங்கேதான்
குடியிருக்கும்
வாரந்தோரும்
குளிப்பாட்டத் தேவையில்லை
வான்மழை அங்கேதான்
ஊற்றெடுக்கும்
வாழ்ந்து பார்ப்போம்
மூப்படைந்த கிராம தேவதை
திகட்டுவதில்லை என்பது
என் கணக்கு..
Subscribe
Please login to comment
0 கருத்துரைகள்
Oldest