கீழாநெல்லி (Phyllanthus-amarus)

0
3338

மூலிகையின் பெயர்: கீழாநெல்லி மருத்துவப்  பயன்கள்: மஞ்சக்காமாலை, கண்நோய், பித்தநோய், சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும், வீக்கம், கட்டி, ஆகியவற்றைக் கரைத்து நரம்புச் சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் செயற்படும். தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கு மருந்தாகும்.

பயன்படுத்தும் முறைகள்:

  • கீழாநெல்லிச் செடி 4 ஏலக்காய், அரிசி, கறிமஞ்சள் தூள் இவை வகைக்கு ஒரு காசு எடை சேர்த்து ஈரவெங்காயம் ஒன்று சேர்த்து பசுவின் பால் விட்டரைத்து அரைத்த கல்கத்தை பால் மோர் ஏதேனும் ஒரு அனுபானத்தில் கலக்கி காலை மாலை கொடுக்க காமாலை நிச்சயம் குணமாகும்.
  • நல்லெண்ணைய் இரண்டு ஆழாக்கு கீழாநெல்லிவேர், கருஞ்சீரகம், நற்சீரகம் இவை வகைக்கு கால் பலம் (9 கிராம்) பசும்பால் விட்டு அரைத்துக் கலக்கிக் காய்ச்சி வடித்து தலை முழுகி வரலாம். இது கீழாநெல்லி தைலமாகும்.
  • கீழா நெல்லி சமூலம் 4 அல்லது 5 செடி, விஷ்ணுகிரந்தி ஒரு கைப்பிடி, கரிசாலை ஒரு கைப்பிடி, சீரகம், ஏலக்காய், பறங்கிச்சக்கை வகைக்கு 5 கிராம், ஆங்கூர் திராட்சை 20 கிராம், தண்ணீர் இரண்டு லிட்டர் விட்டு நான்கில் ஒன்றாகச் சுருக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு வேளைக்கு 60 முதல் 90 மில்லி தினம் இரு வேளை சாப்பிட்டுவர மஞ்சள் காமாலை குணமாகும்.
  • நெல்லி சமூலம் 30 கிராம் 4 மிளகுடன் சிதைத்து 2 குவளை நீரில் போட்டு ஒரு குவளையாகக் காய்ச்சி  மூன்று வேளையாகக் குடித்து வர சூடு, சுரம், தேக எரிச்சல் தீரும்.

இலையில் உப்பு சேர்த்து அரைத்துத் தடவிக்  குளிக்கச் சொறி சிரங்கு, நமச்சல் தீரும்.

  • கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்துத் தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் 40 நாள் உட்கொள்ள பெரும்பாடு, வெள்ளை, மாதவிடாய் தாமதம், உதிரச்சிக்கல் தீரும்.
  • கீழாநெல்லி இலை, கரிசிலாங்கண்ணி இலை தும்பை இலை சம அளவு அரைத்து பெரியோருக்கு புன்னைக் காயளவு, இளைஞர்களுக்குக் கழற்சிக்காயளவு, சிறுவர்களுக்குச் சுண்டைக்காயளவு பாலில் பத்து நாள் கொடுத்துக் காரம் புளி நீக்கி, பால் மோர் சோறும் அரை உப்புமாகச் சாப்பிட காமாலை தீரும்.
Phyllanthus amarus (keelanelli)
  • ஓரிதழ் தாமரையுடன் சம அளவு கீழாநெல்லி சேர்த்தரைத்து நெல்லிக் காயளவு அதிகாலை 45 நாள்கள் சாப்பிட வாலிப வயோதிகம் நீங்கும்.
  • கீழா நெல்லியுடன் சமன் கரிசிலாங்கண்ணி சேர்த்து அரைத்துப் பசும் பாலுடன் 45 நாள்கள் சாப்பிடக் கல்லீரல் பழுது, பாண்டு, சோகை, இரத்தமின்மை தீரும்.

கீழாநெல்லிசாறு, உந்தாமணிச் சாறு, குப்பைமேனி சாறு சம அளவு கலந்து நல்லெண்ணெயில் எரித்து நசியமிடப் பீனிசம், ஓயாத்தலைவலி, நீர் வடிதல் ஆகியவை தீரும்.

பார்வைக் கோளாறு தீரும்
கீழாநெல்லி இலைச் சாறு பொன்னாங்கண்ணி சாறு சம அளவு கலந்து நல்லெண்ணையுடன் கலந்து காய்ச்சித்  தலை முழுக பார்வைக் கோளாறு தீரும்.
மாலைக்கண் , வெள்ளெழுத்து தீரும்
கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்துக் கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் உட்கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து குறை தீரும்.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments