ஊரெல்லம் கடன் வாங்கி
கட்ட விதியின்றி
போதையில் உறவுகளை
பட்டினியில் வாட்டி
ஊதாரியை ஊர் ஊராய் சுற்றி
குடித்து குடித்து மகிழ்ந்திட்டாயோ
மனிதா
உன்னை கட்டிய பாவத்துக்கு பட்டினியா அவள் விதி
உன் பிள்ளையின் எதிர்காலம்
அதோ கெதி
சிந்திக்க மறந்தாயோ மனிதா
குடி குடியென்று
உன்னுயிரை அழித்து
உன் உறவுகளை அநாதையாக்கி
அர்தமற்ற வாழ்க்கை வாழவோ பிறந்தாய்
போதையில் தடுமாறி பாதை மாறி
பாவம் செய்திடுவாய் மனிதா
பாவக்கடனை எங்கே முடிப்பாய் சாபக்கடனே சுமப்பாய்
உழைத்து உழைத்து குடியாய்
கிடந்து என்ன சாதித்தாய் மனிதா
குடி போதையில் தலைக்கணம்
கொண்டு மதிப்பிழப்பாய் மனிதா
நோய்கள் சூழ்ந்து
தனிமரமாய் ஆவாய் மனிதா
குடியை கைவிடு போதும்
குடியால் துன்பக்கடலில் வீழ்ந்தது போதும்
மனிதனாய் திருந்து போதும்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌