கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் குரல் பதிவுகளை நிறுத்தும் வசதி

0
978

த்தின் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை நாளுக்கு நாள் அதிக பிரபலமாகி வருகிறது. பயனர்கள் அலாரம் செட் செய்வது முதல் வானிலை விவரம், செய்திகள், ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் என எல்லாவற்றையும் இயக்க கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட்  சேவையை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

எனினும், தனியுரிமையை பற்றி யோசிக்கும் போது, நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் இருக்கிறது. பயனர்கள் கேட்கும் அனைத்து கேள்விகள் மற்றும் அதற்கான பதில் உள்ளிட்டவற்றை கூகுள் சேமித்துக் கொள்ளும். பயனர்கள் தங்களது குரல் பதிவுகளையும் கேட்க முடியும். கூகுள் பொருத்தவரை இவ்வாறு பயனரின் வாய்ஸ் விவரங்கள் ஒட்டுமொத்த சேவையை மேம்படுத்துவதற்காகவே சேமிக்கப்படுகின்றன. எனினும், இவற்றை பார்த்து சிலவற்றை அழிக்கும் வசதியை கூகுள் வழங்கியுள்ள நிலையில். தற்போது குரல் பதிவுகளை முழுவதுமாக நிறுத்துவது பற்றி தொடர்ந்து பாப்போம்.

  • முதலில் ‘myactivity.google.com’ வலைதளம் செல்லவும்.
  • மேல் இடது பக்கத்தில் உள்ள மூன்று வரி “ஹாம்பர்கர்” ஐகானை சொடுக்கவும்.
  • activity controls ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
  • ஸ்க்ரோல் செய்து  “Voice & Audio Activity” செலக்ட் செய்து off  பெத்தனை கிளிக் பண்ணவும்.மீண்டும் உங்கள் குரல் பதிவு செய்ய வேண்டும் என்றால் அதனை on  செய்து கொள்ளலாம்.பின்பு அதனை உறுதிப்படுத்தும் பாப்-அப் விண்டோவில் “pause” ’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

உங்கள் கூகுள் ஹோம் பக்கத்தில் நீங்கள் இணைக்கப்பட்ட ஒவ்வொரு கூகுள் கணக்கிலும் இந்த செயல்முறையை நீங்கள் மீண்டும் செய்ய வேண்டும்.எனினும் இந்த வசதி புதிய பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

வலைப்பகிர்வு
நன்றி : டெக் தமிழ்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments