அண்மையில் கூகுள் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களின் அனைத்து தகவல்களையும் இணையத்தில் பாதுகாக்க டைட்டான் செக்யூரிட்டி கீ என்னும் புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தியது.
எவ்வாறு செயல்படும்
- டைட்டான் செக்யூரிட்டி கீ யு.எஸ்.பி. சார்ந்த சாதனங்கள் ஆகும், இவை பாதுகாப்பை உறுதிப்படுத்த இரண்டு-அடுக்கு வழிமுறையை செயல்படுத்தும். பொதுவான பாதுகாப்பு வழிமுறையில் பயனர்கள் தங்களின் பாஸ்வேர்டு மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் பதிவிட வேண்டும்.
- இதுபோன்ற செக்யூரிட்டி கீ சாதனங்கள் இரண்டாவது பாதுகாப்புடன் அவற்றை கம்ப்யூட்டரின் யு.எஸ்.பி. போர்ட்டில் செருக வேண்டும்.
- இந்த டைட்டான் செக்யூரிட்டி கீ எப்படி பயன்படும் என்றால் உங்கள் ஜிமெயில் போன்ற கணக்குகளில் சைன்-இன்-செக்யூரிட்டி என்ற விருப்பம் இருக்கும், இதை தேர்வுசெய்து பின்பு start setup என்ற விருப்பத்தை கிளிக் செய்யவேண்டும்.அடுத்தப் பகுதியில் உங்கள் மொபைல் எண்ணைக் கொடுக்க வேண்டும், பின்பு உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒடிபி அனுப்பிவைக்கப்படும். பின்பு பாதுகாப்பு சார்ந்த அனைத்து வழிமுறைகளையும் கொடுத்துவிட்டு உங்கள் கை விரல் ரேகையை கொண்டு register செய்ய வேண்டும்.
“ஆன்லைன் வாசிகளின் விவரங்களை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் கூகுள் சாதனத்தில் தற்போது பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது .”
என்ன குறைபாடு
இதில் உள்ள ப்ளூடூத் மூலம் ஹேக்கர்கள் நீங்கள் இருக்கும் தூரத்தில் இருந்து 30அடி தொலைவில் இருந்தால் மேலும் நீங்கள் லாகின் செய்யும் பொது உங்கள் பாஸ்வேர்டு அவர்கள் அறிந்துதிருந்தால் உங்கள் தகவல்களை அவர்கள் திருடலாம்.
இந்த குறைபாட்டை முதலில் மைக்ரோசாப்ட் நிறுவனம் கண்டறிந்தது,அதை தொடர்ந்து இந்த சாதனத்தை கூகுள் கைவிடுவதாக கூறியுள்ளது.மேலும், சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய சாதனம் வெளிவரும் என்றும் அறிவித்துள்ளது.
வலைப்பகிர்வு
நன்றி : டெக் தமிழ்