கெட்டவனின் டயரிக் குறிப்பு

0
1061
1577887256680

என்னை யாராலும்

புரிந்து கொள்ள முடியாது

என் கோபங்களில்

நியாயம் இல்லாமல் இருக்கலாம்

அதற்காக நான் மட்டுமே

அதெற்கெல்லாம் பொறுப்பாக

அமைந்து விடவும் முடியாது

சில சமயம் என்னை நானே

சந்தேகப்படுவதும் உண்டு

ஏகப்பட்ட மனப்பிறழ்வுகள்

என் நெஞ்சை அரிப்பதும் உண்டு

நில்லாமல் ஓடும் காலத்தில்

நான் செய்து விட்ட காரியங்கள்

ஓரிரு நொடிகளிலேயே என் மனதை

பாழ்படுத்துவதும் உண்டு

ஆனால் கொஞ்சம் சிந்தியுங்கள்

என் கோபங்களுக்கும் செயல்களுக்கும்

நான் மட்டும் தான் பொறுப்பாளியா?

என் சிந்தனைகளும் என் எண்ணங்களும்

வெறிபுடித்துப் பாய

நான் மட்டும் தான் காரணமா?

என் மனதை அந்த எல்லைக்குள் நெருக்கும் போது

என்னால் வேறு எப்படி

என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியும் என்று

எல்லோருக்கும் எண்ணத்தோன்றுகிறது?

நானும் மனிதன் தானே!

ஆசா பாச தழை கட்டுகளால்

இறுக்கப்பட்ட

மானுட ஜென்மம் தானே.

மனிதம் என்றாலே

உரிமை

ஆசை

சுயநலம்

ததும்பிய பிறவி தானே.

நான் மட்டும் என் உணர்வுகளை

புதைத்துக்கொள்ள வேண்டும் என்று

எதற்காக நினைக்கிறீர்கள்?.

எனக்கு உள்ளொன்று வைத்து

புறமொன்று கக்கி பழக்கமே இல்லை

என் மனதில் தோன்றுவதை

நேரிடையாய் பேசும் குணம்

அதற்கு இப்படியும் பெயர் வைக்கலாம்

காயப்படுத்துபவன்!

நீங்கள் என்ன சொன்னாலும் நான்..

நான் தான் நானே தான்!

என்னால் என்னை மாற்ற முடியும் என்று

எனக்கு சத்தியமாக தோன்றவில்லை

காலம் மாற்றினால் மாறுகிறேன்

இல்லை

காலம் முழுதும் இப்படியே

வாழ்ந்து மடிகிறேன்

உங்கள் பார்வையில்

நான் நாக்கினால் காயப்படுத்துபவன்..

கெட்டவன்..

என் பார்வையில் நான்

நானாகவே இருக்கிறேன்…

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments