கொன்றை மரம்

0
1843

கொன்றை மரம் பபேசியே என்னும் தாவரவியற் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது தெற்காசியப் பகுதியைச் சேர்ந்தது. பாகித்தானின் தெற்குப் பகுதிகளிலிருந்து, இந்தியாஊடாகக் கிழக்கே மியன்மார் (பர்மா) வரையும், தெற்கே இலங்கைத் தீவு வரையும் இது பரவலாகக் காணப்படுகின்றது.

  • இது நடுத்தர உயரம் கொண்ட ஒரு மரம். விரைவாக வளரக்கூடிய இம்மரம் 10 தொடக்கம், 20 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இலையுதிர்க்கும் தன்மை கொண்ட அல்லது, ஓரளவு பசுமைமாறாத் தன்மை கொண்ட இம் மரத்தின் இலைகள், 15 முதல் 60 சென்ட்டி மீட்டர் வரை நீளம் கொண்டவை.
  • இறகு வடிவான இவ்விலைகள், 3 முதல், 8 சோடிகள் வரை எண்ணிக்கையான சிற்றிலைகளைக் கொண்டவை. சிற்றிலைகள் ஒவ்வொன்றும், 7 – 21 செமீ நீளமும், 4 – 9 சமீ அகலமும் உள்ளவை. பூக்கள், 20 – 40 சமீ நீளமுள்ள நுனிவளர் பூந்துணர்களில் (racemes) உருவாகின்றன. சம அளவும், வடிவமும் கொண்ட ஐந்து மஞ்சள் நிற இதழ்களாலான பூக்களின் விட்டம் 4 – 7 சமீ வரை இருக்கும். இதன் பழம் 30 – 60 சமீ நீளமும், 1.5 – 2.5 செமீ வரை அகலமானதுமான ஒரு அவரையம் ஆகும்.

நச்சுத்தன்மை கொண்ட பல விதைகளைத் தன்னுள் அடக்கிய இப் பழம் எரிச்சலூட்டும் மணம் தருவது. கொன்றை பெரும்பாலும் அலங்காரத் தாவரமாகவே வளர்க்கப்படுகிறது. வெப்ப வலயம் மற்றும் குறை வெப்பமண்டலப் பகுதிகளில் நன்கு வளரக்கூடியது.

நன்றாக நீர் வடியக் கூடிய நிலத்தில், நல்ல சூரிய ஒளியில்சிறப்பாக வளரும். வறட்சியையும், உப்புத்தன்மையையும் தாங்கக் கூடிய இத் தாவரம், குறுகியகால உறைபனிக் காலநிலையையே தாக்குப் பிடிப்பதில்லை.

 

Golden Shower Treeகொன்றை, பூஞ்சணம், இலைப்புள்ளி, மற்றும் வேர் நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடியது.
 
  • இந்துக்கள், கொன்றைப் பூவைச் சிவனின் பூசைக்குரியதாகக் கருதுகின்றனர். இச் சமய இலக்கியங்கள், சிவபெருமானைக் கொன்றைப் பூவைத் தலையில் சூடியவராக வர்ணிக்கின்றன.
  • இந்த தாவரத்தின் பழத்தில் சோடியம் குறைவாக உள்ளது.
  • 100 கிராம் பழத்தில் வைட்டமின் கே தேவையை 100% வழங்குகிறது.
  • 100 கிராம் உலர்ந்த பழத்தில் 800 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.
  • கொன்றைப் பூவில் ஆற்றல் அதிகமாக இருக்கிறது.

கொன்றை மரம் நன்மைகள்:

  • காய்ச்சல், தொண்டை புண் , வீக்கம், ஆஸ்துமா போன்ற அறிகுறிகளுக்கு கொன்றை தாவரம் மிகவும் உதவியாக இருக்கிறது.
  • அரிப்பு, வீக்கம் மற்றும் தோல் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.
  • இரத்தத்தை சுத்தம் செய்கிறது.
மலச்சிக்கல் நீங்கும்

கொன்றை பூவை வதக்கி துவையலாக்கி உணவுடன் சாப்பிடால் மலச்சிக்கல் நீங்கும்.

பாக்டீரியா, வைரஸ்
  • காய்ச்சல், தொண்டை புண் , வீக்கம், ஆஸ்துமா போன்ற அறிகுறிகளுக்கு கொன்றை தாவரம் மிகவும் உதவியாக இருக்கிறது.
  • அரிப்பு, வீக்கம் மற்றும் தோல் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது
  • இரத்தத்தை சுத்தம் செய்கிறது.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments