கொய்யா மரம்

0
1780

மூலிகையின் பெயர்: கொய்யா

பயன் தரும் பாகங்கள்: இலை, வேர், மற்றும் பழம்.

வளரியல்பு: கொய்யா சிறு மரவகையைச் சேர்ந்தது. இதன் தாயகம் மத்திய அமெரிக்கா மற்றும் தென்மெக்சிகோ. முழுமையான எதிரடுக்கில் அமைந்துள்ள இலைகளையும் வெள்ளை நிற மலர்களையும் சதைப்பற்றுள்ள கனிகளையும் வழுவழுப்பான பட்டையையும் உடைய மரம்.

  • காடுகளில் தானே வளர்வதுண்டு. இதன் உயரம் சுமார் முப்பது அடி வளரும். களிமண்ணிலும் சிறிது மணல் பாங்கான இடத்திலும் நன்கு வளரும். வெப்பமான பிரதேசத்தில் நன்கு வளரக்கூடியது.
  • பூத்து கொத்தாக காய்கள் விடக்கூடியது. காய் பச்சை நிறத்தில் இருக்கும். பழுத்தால் மஞ்சள் நிறமாக மாறும். பழத்திற்குள் வெண்மையான சதைப்பற்றுடன் விதைகள் இருக்கும்.
  • சில வகை கொய்யாவில் சதைப்பற்று சிவப்பாக இருக்கும். விதையிலிருந்து இனவிருத்தி செய்வார்கள்.

மருத்துவப் பயன்கள்:

  • கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.
  • ஒரு பிடி கொய்யா இலையை அரிந்து ஒரு மிளகாயுடன் வதக்கி ஒரு லீற்றர் நீரில் இட்டு கால் லீற்றராகக் காச்சி அரை மணிக்கு ஒரு முடக்கு வீதம் கொடுத்துவர வாந்தி,மந்தம், வாய்ப்பொருமல், வறட்சி, தாகம் அடங்கும்.
  • கொய்யா இலையை வாயில் போட்டு மென்று அதைக் கொண்டே பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் குணமாகும். இதனால் ஆடும் பற்கள் கெட்டி படும். பற்சொத்தை நீங்கும்.
guava
  • கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம்,புண்கள் மேல் தடவினால் அவை விரைவில் குணமடையும்.
  • கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் சிறந்த மருந்தாகும்.
  • கொய்யாமரத்தின் பட்டை காய்ச்சலைப் போக்கும். வேர்ப்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினைக் குணப்படுத்தும்.
  • கொய்யாப்பழத்தை வெட்டி சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று சாப்பிடுவதே சிறந்தது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.
  • விற்றமின் ‘சி’ என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகின்றது.
  • அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும்.
  • உடல்  நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.
  • கொய்யாவின் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும் அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது.
  • வயிற்றுப் போக்கு குணமடையும்
  • பற்களில் ஏற்படும் அரிப்பு அல்லது தேய்வு மாறி பல் வெண்ணிறமாகும். பல்லில் உள்ள அழுக்கு நீங்கும்.
  • கொய்யா மரத்தின் வேரை அதாவது மெல்லிய வேர்களைக் கொண்டு வந்து அதை சிறிதாக வெட்டி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு இரவு முழுவதும் மூடிவைத்து, காலையில் ஒரு டம்ளர் அளவு அருந்தினால் வயிற்றுப் போக்கு குணமடையும்.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments