கொரோனா டைரீஸ் – “எல்லாம் கடவுள் பாத்துப்பார் ; பூட்டிய கதவின் பின்னிருந்து”

0
398
IMG_20211009_132441-c3dbe36a

 

 

 

 

தலைப்பை கண்டு நாத்திகம் என எண்ண வேண்டாம்!!

ஆத்திகதில் உங்கள் தர்கத்தை புகுத்திப்பாருங்கள்.

எப்பொழுதும் போல முடிவு உங்களிடமே!

காலை அலாரம் அடித்தது .. மணி 6.30

கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்தவன், செயல்பட மனமின்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

மனதில் சோர்வு ; உள்ளதில் குழப்பம்!

நான் கடக்கும் இந்த வாழ்வியல் சோதனைகளை அசைபோடுகயில் , மாதத்தவனைகள் எனும் இ.யம்.ஐ கள் கண் முன்னே பளிச்சிட,செயல்பட்டேன் !

குளித்து முடித்து அலுவலகம் செல்ல தயார்ப்பட்டேன்.

வீட்டை பூட்டியப்போது ஒரு எண்ணம் “நம் கஷ்டத்தை எல்லாம் கடவுள் கவனித்துக்கொண்டுடிருகிற்றரா”?? என்று!

எது எப்படியோ வாகனத்தை இயக்கினேன், அலுவலகம் செல்ல.

வழியில் திடீர் என ஒரு எண்ணம். கோவிலுக்கு செல்லுவோமா என்று??

சென்றேன்!

அது பல நூறு வருடங்கள் பழமையான ஒரு கோவில். ஒற்றை கோபுரம் ஒற்றை கருவறை கொண்டது.எப்பொழுதும் பூட்டியே கண்டிருக்கிறேன்.

கட்டளகாரர்களின் வீடுகள் கோவிலை சுற்றி இருக்க, அவ்வபோது வரும் அர்ச்சகர் பூஜை நிகழ்த்திவிட்டு செல்வார்.

ஒரு சிறு தெருவில் அமைந்திருந்த அந்த கோவிலுக்கும் அதை சுற்றி உள்ள வீடுகளுக்கும் சில அடிகளே எட்டும் தூரம் என சொல்லலாம்.

நகர வளர்ச்சியில் அந்த கோவில் இன்னும் இடிபாடுகளில் சிக்காமல், சிதையாமல் இருப்பது ஆச்சரியதிற்குறியது.

வாகனத்தை தெருவின் முனையில் நிறுத்திவிட்டு, பாதனிகளை வாகனதிற்கு அருகே கழட்டிவிட்டு,கோவிலை நோக்கி அந்த குறுகிய தெருவில் நடந்தேன்.

நான் முன்னே கூறியது போல கோவில் பூட்டபட்டு இருந்தது.எனினும் கோவிலின் முகப்பு ஸ்தம்பத்தையும் அதில் பொறிக்கப்பட்ட உபதெய்வங்களையும் வணங்கி விட்டு பூட்டிய கதவின் வழியே கருவறை தெய்வத்தை வணங்கிகொண்டிருந்தேன்.

அப்பொழுது தான் அந்த காட்சி கண்ணில் பட்டது!

ஒரு முதியவர் மண்ணில் விழுந்து புரண்டுகொண்டிருந்தார்,

எழுவதற்க்கும் எழுப்புவதக்ற்கும் வாய்ப்பு இல்லாமல். நான் அவரை கண்டுகொண்டேன் என தெரிந்ததும் அவர் என்னை செய்கையில் அழைத்தார். நான் அவருக்கு உதவ விரைந்தேன்.

அவர் விழுந்து புரண்டுகொண்டிருந்தது ஒரு வீட்டின் வாசல்படியில்.அவரது கைதடி அவருடன் சேர்ந்து புரண்டுக்கொண்டிருந்தது.

அவரை எழுப்ப முற்பட்டேன். முயற்சி செய்தேன்.ஆனால் அவரால் ஈடு கொடுக்க முடிவில்லை.யாரேனும் உதவி செய்தால் தேவலை என எண்ணிய தருணத்தில் வீட்டின் உள்ளே இருந்து சத்தம் கேட்க உதவிக்கு அழைத்தேன்.

யாராவது இருக்கீங்களா?? என்று

இரண்டு மூன்று முறை சத்தமிட பின் ஒரு மூதாட்டி வெளியே வந்தார்.

 

 

 

 

 

 

கூன் விழுந்த அவரது நடையில் தெம்பில்லை.உதவிக்கு இவர் சரியான ஆள் இல்லை என நினைத்த தருவாயில் என்னப்பா?? என்ன வேணும் ?? என வினவினார்.

“பெரியவர் கீழ விழுந்துட்டார் போல எழுப்பணும்” என நான் முடிக்கும் முன்னே “உடு அவர.. கேடக்கடும் அப்படியே” யென்றார்.

அப்பொழுது தான் விளங்கியது எனக்கு அது முதியவரின் மனைவி , அவர் விழுந்து கிடந்தது அவரது வீட்டின் வாசலில் என்று!

மீண்டும் நான் அவரை தூக்க முயன்றப்போது , அப்படி எங்க வெளிய போக துடிக்கிற நீ??

வீட்டுல அடங்கி ஒகார தெரியாது உனக்கு??

ஒரு நிமிசம் உன்ன வச்சிகிட்டு நிம்மதியா இருக்க முடியுதா??

தினமும் இதே ரோதனயா போச்சு உன்கிட்ட!!

என மூதாட்டி தன் கணவனை நோக்கி கத்தினார்.

அந்த முதியவர் வீழ்ந்துகிடந்தவாகில் இரு கை கூப்பி தன் மனைவியை நோக்கி “அம்மா!! எல்லாம் கடவுள் பாத்துபார்” என்றார் தன் பார்வையை அந்த கோவிலை நோக்கி திருப்பினார்!

நான் மீண்டும் அவரை தூக்க முற்பட்டதை கண்ட அந்த மூதாட்டி “போப்பா அதான் சொல்றேன்ல, அவர் எழுந்தப்பார், நீ போப்பா” என்றார்.

மீண்டும் அந்த முதியவர் அதே தோரணையில் “எல்லாம் கடவுள் பாத்துபார்” ஏன்னறார். இம்முறை மூதாட்டியை நோக்கி!!

நானும் கோவிலின் கோபுரத்திற்கு ஒரு நமஸ்காரம் செய்துவிட்டு நகர்ந்தேன். வாகனத்தை அலுவலகம் நோக்கி செலுத்தினேன்.

வழியெங்கும் என் எண்ண ஓட்டத்தில் பல கேள்விகள்

“எல்லாம் கடவுள் பாத்துபார்” என்றாரே கடவுள் எதை பாத்துபார் ??

அந்த முதியவர் விழுந்து கிடப்பதையா??

அந்த மூதாட்டியின் செயலையா??

பிராத்தனை செய்ய வந்த என்னையா??

என் பிராத்தனைக்கு காரணமான என் தேவைகளையா??

இந்த நிகழ்வுகளையா ??

அல்லது இந்த நிகழ்வுகளுக்கான காரணங்களயா??

எதுவாயினும் பூட்டிய கதவின் வழியே கடவுள் இதை எல்லாம் எப்படி பார்க்க முடியும்?? செவிவழி கேட்க வேண்டுமானால் முற்படலாம்!!

என எண்ணி வாகனத்தை அலுவலக வளாகத்தில் நிறுத்தினேன்.

அந்த வளாகத்தின் உள்ளே உள்ள ஒரு வேப்ப மரத்தின் அடியில் சிதிலம் அடைந்த கடவுளின் சிலை ஒன்றை யாரோ ஒருவர் வைத்து சென்று இருக்கிறார்.

நான் அதை கடக்கயில் “கடவுள்” என்னை பார்த்துகொண்டிருக்கிறார்!!

– தினேஷ் ஜாக்குலின்

 

 

 

 

 

 

முந்தைய கட்டுரை” இதயத்தின் ஓசை “
அடுத்த கட்டுரைகாதல் தரும் வலி…
தினேஷ் ஜாக்குலின்
"கொரோனா டயரீஸ்" வானொலி காலத்தில் பிறந்த நாம் இன்று காணொளி காலத்தை கடந்து கொண்டு இருக்கின்றோம் இயற்கை ஒரு சிறந்த ஆசானாய் நம் முன் மீண்டும் ஒரு விஸ்வரூபம் எடுத்து பாடங்கள் கற்றுக்கொடுத்து கொண்டு இருக்கிறது….ஒரு நுண் கிருமியின் வாயிலாக!! "மாற்றம் ஒன்றுதான் மாறாதது – மகனே" நோடிபொழுதும் சக மனிதனையும், மனிதத்தையும் மதிகாதவனாய் சுற்றித்திரிந்து வந்தோம். ஆனால் நாம் மறந்த மனிதத்தையும் ; சகமனிதனையும் உற்று நோக்க வைத்திருக்கிறது இந்த கிருமி. அதுவும் அது கடக இயலாத முககவசத்தையும் தாண்டி. அப்படி பல மனிதர்களை நாம் கண்டிருப்போம்,அவர்களை பற்றி கேட்டிருப்போம்,சிந்தித்திருபோம். அவ்வாறு நான் கண்டும்,கேட்டும்,சிந்தித்த மனிதர்களை பற்றிய தொகுப்பு தான் இந்த "கொரோனா டியரிஸ்" இதற்கு ஏன் இந்த பெயர் ?? என்ன காரணம்?? என கேட்கலாம்… இந்த "லாக் டவுன் " காலத்தில் தான் நான் கடந்த அத்தகைய மனிதர்களை எண்ணத்தில் அசைபோடவைத்து , உள்ளதில் பசை போடவைத்தது இந்த "கொரோனா" இனி பக்கங்கள் விரியும்,என் எண்ண ஓட்டத்தில் ஆனால் உங்கள் காட்சி மற்றும் குரல் மொழியில்.. – தினேஷ் ஜாக்குலின்-
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments