செய்முறை:
விாிப்பில் அமா்ந்து வலது காலை இடது தொடைக்குக் கீழ் மடிக்கவும். அதைப்போல் இடது காலை வலது தொடைக்குக் கீழ் மடக்கவும். வலது கையால் இடது காலையும் இடது கையால் வலது காலையும் பற்றிக் கொள்ளவும்.
நிமிா்ந்த நிலையில் கண்ணை மூடிக்கொண்டு சுவாசத்தை மெல்ல உள்ளுக்கு இழுத்து மெல்ல வெளியில் விடவும். சுமாா் ஐந்து நிமிடம் கழித்து இப்படியே அமா்ந்த நிலையில் சுவாசத்தை உள்ளிழுத்துப் பின் வெளியே விடவும்
மூச்சின் கவனம்
இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள்
மார்பு விரிந்து நுரையீரல்கள், இதயம் வலுவடையும்.
பயன்பெறும் உறுப்புகள்: மனம் மற்றும் உடலுக்கு அமைதியை கொடுக்கும்,குறுகிய மார்பு விரிவாகும்,கால்களுக்கு வலிமையை கொடுக்கும்,மூட்டுவலி வராமல் காக்கும்,முதுகு நுனி பாகங்களை வலுப்படுத்தும்.
ஆன்மீக பலன்கள்: மனச்சோர்வு நீங்குகிறது, தன்னம்பிக்கை அதிகரிக்கின்றது, மனஅமைதி பெறுகிறது .

குணமாகும் நோய்கள்
பசியின்மை நீங்கும். எலும்புகள் மற்றும் மூட்டுகள் வலிமை பெறும். மூட்டு வீக்கம் சம்பந்தமான நோய்கள் குணமடையும். தசைப்பிடிப்பு நீங்கும். மூலபந்தம் நடைபெறுவதால் மூல நோயும் குணமாகும்.
எச்சரிக்கை
இந்த ஆசனத்தை கழுத்து தேய்மானம், முதுகெலும்பு தேய்மானம் உள்ளவர்கள் செய்யக்கூடாது.