~கோழிக்குஞ்சுகள், கரையான்கள் மற்றும் வானம்~

0
922
IMG_20210113_162313-5d177dcc

வானிலிருந்து எது விழுந்தாலும்,
எம் கோழிகள்
நனைந்த செத்தையில்
கரையான்களைக் கொத்திக் கொண்டிருக்கும்
தன் குஞ்சுகளையும்,
சென்ற போரில் தாயை இழந்த குழந்தைகளையும்
இழுத்து இறக்கைக்குள்
காத்துக்கொள்ளும்..

சில நேரங்களில்
குஞ்சுகளின் குரூர அலகிலிருந்து
தப்பிய கரையான்களுக்கு
வானிலிருந்து
குண்டுகள் மூலம் மரணம் அருளப்படும்!

சிலநாட்கள் கழித்து
இடிபாடுகளுக்குள்
கரையான்கள்
கோழிக்குஞ்சுகளின்
இரத்தம் தோய்ந்த
சிதறிய கண்களை
வெறியுடன் பழிதீர்க்கும்!

கரையான்களுடன்
எந்த பகையும் இல்லாத
தாயில்லா குழந்தையின்
கண்களை எறும்புகள்
மொய்த்திருக்கும்!

சபிக்கப்பட்ட வானத்தின் கீழ்
ஒவ்வொரு மைக்ரோ செகண்டும்
நாங்கள் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறோம்!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments