தேவையான பொருட்கள் :
கொண்டைக்கடலை – 200 கிராம்
சமையல் சோடா – ஒரு சிட்டிகை
மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
உப்பு – சிறிதளவு
நன்மைகள்: கொழுப்பைக் குறைக்கும் கொண்டைக்கடலை. உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் பெரும் பங்கு வகிக்கின்றது. உடல் சோர்வை போக்கும் தன்மை கொண்டது.
செய்முறை:
- கொண்டைக்கடலையைக் கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, நிழலில் உலர்த்தவும்.
- உலர்ந்த பிறகு கொண்டைக்கடலையை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்து எடுக்கவும். மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
நன்மைகள் : சன்னா சத்தானது. குழந்தைகளுக்கு விருப்பமானது.