வானரத்தின் வழிவந்த வம்சமே – இன்று வல்லரசாய் கர்வம் கொண்டு நிற்கின்றாய்!
வளர்ச்சிகள் பல கண்டிட்ட போதிலும் உடன் வந்த மிருக குணம் இன்னும் மாறவில்லையே!
மனிதனென்று பேர் கொண்ட உன்னை
புனிதனாய் வாழ வைப்பது மதங்கள்
மார்க்கங்கள் வேறாயினும்
நோக்கங்கள் ஒன்றே
நீர்வீழ்ச்சி ஆறாய் ஆங்காங்கே பிரிந்து நிறைவாய் கடலை அடைவது போலே
எம்மதமாயினும் அது நம்மை நல்வழி நோக்கியே வழிப்படுத்தும்
இதற்குள் ஆயிரம் பேதங்கள் எதற்கு?
உயர்ந்தது தாழ்ந்ததென்ற பேச்சுக்கள் எதற்கு?
புனிதமான மதத்தின் பேரில் கலவரங்கள் எதற்கு?
அகிம்சை போதிக்கும் மதங்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் தட்சணையா!
மதமாற்றங்களை எதிர்க்கின்றாய்!
மமதை கொண்டு நடக்கின்றாய் !
உன் மதம் உன் உரிமை அதற்கு எவர் சம்மதமும் தேவையில்லை
நீ தழுவும் மதத்தில் உண்மையாயிரு – பிற மதங்களை நிந்திக்காதே !
சமதர்ம கொள்கையை ஏற்றுக்கொள்
சகிப்பு தன்மையை உண்டாக்கு
உன் தவறுகளை திருத்து – பிறர் தவறுகளை மன்னிக்க பழகு
உன் மதத்தினை போற்று
பிற மதத்தையும் தூற்றாது மதி மதங்கொண்டு குரோதம் வளர்க்காதே
அனைவருக்கும் உண்டு மத சுதந்திரம்
அதில் குறுக்கே செய்யாதே நரித்தந்திரம்
விரும்பும் மதம் வழி சென்று
நற்பண்புகளை கற்று நலமுடன் நீ
வாழு…. பிறரையும் வாழ விடு….
இப்படிக்கு
உரிமையுடன் உன்
மூதாதை
Subscribe
Please login to comment
0 கருத்துரைகள்
Oldest