இந்த பூமியில் கிட்டத்தட்ட 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அதில் ஒவ்வொருவரும் பல வகைகளில் வேறுபட்டிருந்தாலும், ஒருசில விஷயங்களில் ஒன்றுபட்டுள்ளனர். காலையில் தூக்கத்திலிருந்து எழுந்துகொள்ளுவதிலிருந்து, உண்ணும் உணவு, பயண முறைகள், படிப்பு அல்லது வேலை என பல்வேறு நடைமுறைகளில் எவரோ ஒருவரையோ, பலரையோ ஒன்றுபட்டு செயல்படுகிறோம்.
ஆனால், 700 கோடி பேரில் இந்த ஆறு பேரின் வாழ்க்கைமுறை மட்டும் தலைகீழாக உள்ளது. ஆம், நமது தலைக்கு மேலே சுமார் 250 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஆறு விண்வெளி வீரர்களின் தினசரி செயல்பாடுகள் முற்றிலும் வேறுபட்டவை.இங்கு சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர், தற்போது இந்த விண்வெளி நிலையத்தில் பாக்டீரியா உள்ளது என ஒரு தகவல் வந்துள்ளது
இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் உட்பட நாசா ஆராய்ச்சியாளர்கள், சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) உள்ளே பாக்டீரியா நிரம்பியுள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.
ISS இன் நுண்ணுயிரிகளானது பெரும்பாலும் மனித-தொடர்புடையதாகும் எனவும் மிக முக்கியமான பாக்டீரியாக்கள் ஸ்டேஃபிளோகோகஸ்(Staphylococcus), பான்ட்டியா(Pantoea) மற்றும் பேசிலஸ்(Bacillus) உள்ளதாக தெரிவிக்ககின்றன.
மைக்ரோபியோமில் வெளியிடப்பட்ட ஆய்வில், மூடப்பட்ட விண்வெளி உள்துறை பரப்புகளில் ஒரு (HEPA high-efficiency particulate air)வடிகட்டிஉள்ளது இது ஒரு இயந்திர காற்று வடிகட்டி. மேலும் வாழ்வதற்க்கு இது ஒரு கடுமையான சூழலாகக் கருதப்படுகிறது” என நாசா ஜெட்டிலுள்ள மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி கஸ்தூரி வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த நுண்ணுயிர் விண்வெளி ஆராச்சியாளர் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துமா என ஆராய்ந்து வருகின்றனர். மேலும் ஆய்வாளர்களுக்கான அச்சுறுத்தலைத் தவிர்க்க பாக்டீரிக்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த ISS நுண்ணுயிரிகள் எவ்வாறு விண்வெளியில் செயல்படும் என்ற ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை டாக்டர் செஸின்ஸ்க் சியப்ப் கூறினார்.மேலும் இந்த சர்வதேச விண்வெளி நிலையம் 1998ல் கட்டப்பட்டது மற்றும் 222 விண்வெளி வீரர்கள் இங்கே வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வலை பகிர்வு
நன்றி : டெக் தமிழ்.