சாப்பிட்டவுடன் செய்யக் கூடாத ஒன்பது விஷயங்கள்

1
1139

01. புகை பிடிக்காதீர்கள்

சாப்பிட்டவுடன் நீங்கள் புகைக்கும் ஒரு சிகரெட் 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு இணையான பாதிப்புகளை உருவாக்கும். குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும்.

02. தூங்காதீர்கள்


சாப்பிட்ட அடுத்த நிமிடமே படுக்கைக்கு செல்வது தவறு. உடனே தூங்கி விடுவது அதைவிடத் தவறு. சாப்பிட்டதும் உறங்கி விடும் பழக்கம் வயிற்று உப்புசம், தூக்கத்தில் தொந்தரவுகள் போன்றவற்றை ஏற்படுத்தும். செரிமானத்தை பாதிக்கும். உடல் எடை அதிகரிக்கவும் காரணமாகும். உணவுக்கும் உறக்கத்திற்கும் இடையில் குறைந்தது இரண்டு மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும்.

03. டீ காபி குடிக்காதீர்கள்


சாப்பிட்டவுடன் டீயோ காபியோ குடிப்பது உணவின் மூலம் உடலுக்குள் சென்ற ஊட்டச்சத்துகளை உடல் முழுமையாக கிடைக்க விடாமல் தடுத்துவிடும். உணவு உண்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு குடிக்கலாம். இரவில் அதையும் தவிர்ப்பதே சிறந்தது!

04. குளிக்காதீர்கள்


சாப்பிட்டு முடித்ததும் குளிப்பதால் வயிற்றை தவிர உடலின் அனைத்து பகுதிகளிலும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். செரிமானம் பாதிக்கப்படும். சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து குளிப்பதே சிறந்தது.

05. பழங்கள் சாப்பிடாதீர்கள்

பழங்கள் செரிப்பதற்கு பிரத்தியேக நொதிகளும் குறிப்பிட்ட கால அவகாசம் தேவை சாப்பிட்ட உடன் பழங்கள் சாப்பிடுவதால் செரிமானம் பாதிக்கப்படும் வாயுத்தொல்லை ஏற்படும் நெஞ்சு எரிச்சலும் ஏற்படலாம்.

06. ஐஸ்வாட்டர் குடிக்காதீர்கள்

சாப்பிட்டு முடித்ததும் ஐஸ் வாட்டர் குடிப்பதால் செரிமானம் பாதிக்கப்படும் மலச்சிக்கலும் ஏற்படலாம்.

07. நடக்காதீர்கள்

பலமான உணவை உண்ட பிறகு சிறிது தூரம் நடப்பது நல்லது என்று பலர் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். ஆனால், சாப்பிட்டவுடன் நடப்பதை விட 30 நிமிடங்களுக்கு பிறகு நடப்பது நன்மை பயக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கனத்த வயிற்றுடன் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது அமிலம் மேலெழும்பி வரும். எதுக்களித்தல் பிரச்சினை ஏற்படும். அஜீரணம் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

08. உடற்பயிற்சி செய்யாதீர்கள்


சாப்பாட்டுக்குப் பிறகு உங்கள் வயிற்றுக்கு ஓய்வு தேவை உணவு செரிப்பதற்கு அதற்கு அவகாசம் தேவை. கடுமையான உடற்பயிற்சிகள் செய்வது இந்த செயலை பாதிக்கும்.

09. பிரஷ் செய்யாதீர்கள்


சாப்பிட்டதும் பிரஷ் செய்வது நல்ல பழக்கம் என்றுதானே கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மைதான் ஆனால், சாப்பிட்டு முடித்ததும் வாயை கொப்புளியுங்கள். அரை மணி நேரம் கழித்து பிரஷ் செய்யுங்கள்.

Source: விகடன்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
நாஞ்சில் ஹமீது
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

சாப்பிட்டு மூன்று மணிநேரத்திற்கு பின் தான் குளிக்க வேண்டும் அரை மணிநேரத்தில் குளிக்கலாம் என இந்த கட்டுரையில் இருப்பது தவறு .அதுபோல் சாப்பிட்டவுடன் உடலுறவும் கூடாது செரிமானத்தை பாதிக்கும்