சாம்பல்…

0
1102
1.சாம்பல்…
 
சாம்பல் நிறத்தை பற்றி என்ன நினைக்கிறாய் கஸல்…
அது சூடான நிறம் இன்னும் நிமித்தமாக அவ்வளவு தான் சொல்லமுடியும் 
நானும் நீயும் பேசிக்கொள்கையில்
ஆஷ் ட்ரேயில் தட்டி விடும் சாம்பல் நம்மை உற்சாகப்படுத்துகிறது…
ஆனால் அதை வர்ணம் என்காதே..
நிறங்கள் என்னை குழப்பமடையச் செய்கிறது காதலி…
நீயும் தான்…
என் கண்கள் வெளிர் சாம்பல் என்கிறாய்
பிறகு அதை அடர்ந்த சாம்பாலாக மாற்றச் சொல்கிறாய்..
நிறங்கள் திருப்திப்படுத்துவதில்லை.
ஆகையால் இன்னும் இறங்கிப் போ..
திற…
புதிய வண்ணங்களைத் தேடு..
என் எலும்புகளின் சூடுகள் உன் கழுத்து நரம்புகளில் படரும் நெருக்கத்தில் 
நாம் சாம்பல் புட்டியில் தேநீர் அருந்திக் கொண்டிருப்போம்…
 
2.சாம்பல் நிறம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் 
ஒரு இரவில் 
நாம் ஒரு சர்ப்பத்தை கடந்து வந்தோம் .
ஒரு வெறுஞ்சாலையை கடந்து வந்தோம்..
ஒரு பழையநாளிதழ் கடையை கடந்து வந்தோம்.
ஒரு இருமல்கிழவனை கடந்து வந்தோம் 
பாதி எரிந்த மரமொன்றை கடந்து வந்தோம் 
பீத்தோவனின் இசைக்குறிப்பை சிலாகிக்கும் குடிகாரனை கடந்து வந்தோம் 
 
நஸீகா..
 
சாம்பல் நிறம் பரவியிருக்கும் இந்த 
உலகில் உவப்பானதென்று தனித்தறிய ஏதுமில்லை.
இந்த காதலை ,
இந்த தவிப்பை 
நிலவுக்கு அப்பால் 
சாம்பல் சமைக்கும் கிழவியொருத்தி உணர்ந்திருந்தாள் .
அவளது கனவுதான் இந்த உலகம்.
அவளது கனவுதான் நீயும்நானும்.
இந்த வெப்பச்சூட்டில் இறங்கி 
என் கழுத்து நரம்புகள் அறுபடும் நெருக்கத்தில் 
நாம் அருந்தப்போகும் தேநீர் சாட்சியாக சொல்கிறேன்.
சாம்பல் இறுதியல்ல..
தொடக்கம்
#கஸல்
 
-எழுதியவர்
நஸீஹா முகைதீன் 
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments