சாம்பல் கீரி

0
4536

கீரிபிள்ளை மிகக் கொடிய விஷத்தன்மை வாய்ந்த ராஜநாகத்தின் விஷத்தை தாங்கக் கூடிய அபரிதமான எதிர்பாற்றலை பெற்று விளங்குவதே அதனுடைய தலையாயப் பாதுகாப்பு அரணாகவும் மற்றவற்றிலிருந்து வேறுபட்ட விதிவிலக்கான அம்சமும் ஆகும்.

நல்லப் பாம்புடைய வீரியம் மிக்க விஷத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய இந்த அம்சம்தான் மற்றவற்றிலிருந்து கீரிப்பிள்ளை வேறுபட்டு விளங்க காரணமாக அமைந்துவிடுகிறது. கீரிப்பிள்ளை இனங்களில் குறிப்பிட்ட இனங்கள் உள்ளது. 11 அங்குலத்தில் இருந்து 16 அங்குலம் வரை இருக்கும். அவைகளின் ரோமங்களின் நிறம் ஆரஞ்சு, பழுப்பு, மஞ்சள் மற்றும் சாம்பல் நிறத்துடன் இருக்கும்.

  • அவைகளுக்கு குறுகிய கால்கள் இருக்கும் மற்றும் ஆண்கள் பெண்களை  விட  பெரிதாக இருக்கும். அவைகள் இரவில் நிலவொளியில் வேட்டையாடும். கீரிகள் புல்வெளிகளிலும், வறண்ட பகுதிகளிலும் பொந்து அமைத்து தனியாகவோ அல்லது ஜோடிகள் வாழ்கிறது.
  • மற்றும் பாறைகளின் இடையே ஒரு குகை போன்ற அமைப்பு அமைத்து வாழ்கிறது. பூச்சிகள், பாம்புகள், பல்லிகள், பறவைகள், விலங்குகள், நில நீர் வாழ்வன, அழுகிய, முட்டை மற்றும் எப்போதாவது பழத்தில் உள்ள கொட்டையை உணவாக உட்கொள்கிறது.
Gray Mongoose
சாம்பல் கீரி
  • இது தனது இரண்டு கால்களையும் பயன்படுத்தி நிமிர்ந்து நிற்கும்போது சமநிலையில் இருக்க வால் பெரிதும் பயன்படுகிறது. வலுவாக இருக்கும் 4 விரல்கள், 2 செ.மீ நீளத்தில் தோண்டி இரையைத் தேடிச் சாப்பிட உதவும் வகையில் அமைந்துள்ளன. வளைந்த நகங்கள் மரம் ஏறவும் உதவுகின்றன.
  • ஆண் கீரிகள் 730 கிராம் எடையும் பெண் 720 கிராம் எடையும் கொண்டனவாக இருக்கும். உடல் 25-35 செ.மீ. நீளம் வரையிலும் வால் 17-25 செ.மீ வரையிலும் இருக்கும்.

கீரி ஒரு வருடத்தில் பல முறை குட்டிபோடுகிறது கருகாலம் 60 நாட்கள் மூன்று அல்லது நான்கு குட்டிகள் போடும் குட்டிகளை பெண்கீரியே வளர்க்கும். 3 வாரத்தில் அவைகள் கண்களை திறக்கும் மற்றும் 4 வது வாரத்தில் அவைகள் திட உணவு சாப்பிட தொடங்குகிறது 50 நாட்களில் அவைகளின் வயது எடை மூன்று மடங்காக ஆகும். வயது 9, 10 வாரங்களில் பாலியல் முதிர்ச்சி அடைகிறது. கீரி வகைகள் 40 கிளையினங்கள் உள்ளன.

சாம்பல் கீரி உணவு பல்லி, பாம்பு, சிலந்தி, தேள், முட்டை, சிறிய பாலூட்டிகள் மற்றும் சிறிய பறவைகளை இவை உணவாக உட்கொள்கின்றன. ஒரு குழுவிற்கு ஒரு பாதுகாவலரை (பெண் கீரி) வைத்து விட்டு மற்றவை இரை தேடச் செல்கின்றன.

முந்தைய கட்டுரைசிங்கம்
அடுத்த கட்டுரைமான்
GOBIKRISHNA D
தொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments