சிங்கம்

0
8432

சிங்கங்கள் காட்டின் ராஜா என அழைக்காபடுகிறது.சிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது.

  • தமிழில் ஆண் சிங்கத்தை அரிமா அல்லது ஏறு என்றும், பெண் சிங்கத்தை சிம்மம் என்றும் கூறுவது வழக்கம். ஏறுகளின் கழுத்தில் பிடரி இருப்பது சிறப்பாகும். பிடரியை உளை என்றும் உளை மயிர் என்றும் கூறுவதுண்டு. அரிமா பூனைப் பேரினத்தைச் சேர்ந்தது. பூனைப் பேரினத்திலேயே, புலிக்கு (வரிப்புலிக்கு) அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு.

சிங்கங்களின் வாழ்நாள் பொதுவாக பத்திலிருந்து பதிநான்கு ஆண்டுகள் வரை இருக்கும். ஆண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 12 வருடங்களும் பெண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 16 வருடங்களும் ஆகும்.

  • சிங்கங்களின் கூட்டத்தை எதிர்த்து சண்டையிடும் துணிச்சல் முள்ளம்பன்றிக்கு இருக்கிறது.
  • 2 பெண் சிங்கங்களுக்கு பிடரிமயிர் அதிகமாக இருக்கும் ஆண் சிங்கங்களின் மீது தான் அதிக ஈர்ப்புக் கொள்ளுமாம்.
  • தீக்கோழி ஒரே உதையில் மனிதர்களை மட்டுமின்றி சிங்கத்தையும் உயிரிழக்க வைத்திடுமாம். 
  • பூனை குடும்பத்தில் புலிக்கு அடுத்து இரண்டாவது பெரிய விலங்கு சிங்கம். சராசரியாக ஓர் ஆண் சிங்கம் 250 கிலோ வரை இருக்கும். 
  • சிங்கங்களில் வேட்டையாடுவதில் 90% பெண் சிங்கங்கள் தான். ஆண் சிங்கங்கள் மிகவும் அபூர்வமாக தான் வேட்டைக்கு செல்லும். 
  • மலை சிங்கங்கள் அதனுடைய இரையை புதைத்து வைத்துவிட்டு, பசிக்கும் போது மீண்டும் எடுத்து உண்ணும் பழக்கம் கொண்டுள்ளது.
Lion
சிங்கம் வகைகள்
  • ஆசியச் சிங்கம்
  • எத்தியோப்பிய சிங்கம்
  • டிரான்ஸ்வால் சிங்கம்
  • தென்மேற்கு ஆப்பிரிக்க சிங்கம்
  • காங்கோ  சிங்கம்
  • மேற்கு ஆப்பிரிக்க சிங்கம்
சிங்கங்களின் வசிப்பிடம்

சிங்கம் அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர்க்காடுகளில் வாழ்வதையே விரும்பும். சிங்கங்கள் நல்ல கேட்கும் திறன் கொண்டவை மேலும் இதன் கர்ஜனை சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்கள்) வரை கேட்கும் திறன் கொண்டது பூனை இனத்தில் உள்ள விலங்குகளில் சிங்கம் கூட்டமாக வாழும் இயல்புடையது.

சிங்கங்களின் உணவு

மான், பன்றி முதலான விலங்குகளை வேட்டையாடி உண்ணும். பெரும்பாலும் பெண் சிங்கங்களே வேட்டையாடும். வேட்டையாடிய விலங்குகளை முழுவதுமாக உண்ணாமல் எலும்பு அதனையொட்டிய சதைப்பகுதிகளை அப்படியே விட்டுவிடும். அதனால் மற்ற விலங்குகள் (ஓநாய், கழுதைப் புலி முதலானவை) எஞ்சியவற்றை உண்டு வாழ்கின்றன.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments