சிரசில்லா மனித குணம்…

0
663
3000

 

 

 

 

மனிதனே உலகின் தெய்வம்
மனிதனே உலகின் அரக்கன்
எண்ணங்கள் பலவிதம் கொண்டு
பிரிக்கிறான் மனித இனத்தை
கௌரவ வெறி கொண்டு

பிறக்கும் போதிவ்வுலகில்
யாதரியாமல் இருந்து
வளரும் போதிவ்வுலகில்
யாமரியாதும் அறிந்து
கண்டான் மனித அளவீடு

தீவரவாதி கையுள்ள ஆயுதம்
எதிர்த்தால் மடியும் புவி நோக்கி
ஆயுத பலமறிந்த உலகரிங்கு
அறியாமல் கிடந்தனரெமக்குள்
உறங்கி கிடந்த அரக்கனை

ஒரு போதும் இறைவனிங்கு
பிரிக்கவில்லை மனிதனை
பல்வேறு பிரிவுகளுக்கு
மனிதனே இனங்கண்டான்
பொல்லாத இனவாதமிங்கு

நோய்கில்லை இன பேதம்
மரணத்துக்கில்லை இன பேதம்
இயற்கையே ஒன்றென பார்க்கும்
புனித மனித குலத்தை
வெறி கொண்டு வகுப்பது
தளரா மீசையாளனை
எழ வைக்கும் சூழ்ச்சியே…..

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments