சீதனக்கொடுமை

0
1405

 

 

 

 

 

பெண்ணென்ற பிறப்பு என்ன
பணத்துடனா வருகிறது ?
அவளை பெற்றுவிட்ட பிறகு
பணம் தான் சொரிகிறதா ?
உங்கள் வம்சத்தை சுமக்க
பூமி வந்த பிறப்பு…. இவள்
அகிலத்தையே காத்திடும்
பூமித் தாயிற்கு நிகரல்லோ… !

காதலெனும் பேர் சொல்லி
நாலு பேர் சுத்தினாலும்
பெற்றவரின் வளர்ப்பு வழுகாது
உற்றவரின் கற்பு காக்க
அவர் காதலிற்கென மட்டும்
உயிர் வாழும் உத்தமியவளை
ஒழுக்கம் அற்றவள் என்று
புகுந்த வீடு சொன்னதும் – அவள்
தலையும் நிலம் நோக்க நின்றது
சீதனக்கொடுமையின் சீரழிவே…. !

கட்டுறவன் கதையாமல் ஒரு
கரையில் இருந்தாலும் – அவனை
ஆணென காட்டி பெண்ணிடம்
பணம் பொருள் பொன்னென
பறித்திட மாமியென மச்சாளென
வேஷமிட்டு வரவேற்று உறவாடும்
உறவுகள் ஒரு சில … – மாறி
உள்ளிருக்கும் உறவு அணைத்தாலும்
அத்தானென அண்ணியென
வெளியிருந்து வரும் உறவு
கேட்டிடும் சீர்வரிசையால்
பெண்ணை பெற்றவரின் மனமோ
பித்தாயிடும்…… அது
சீதனக்கொடுமையின் சீரழிவே…!

கட்டினவன் கரங்கள் – பெண்
மேனி தொட அவனடிமையாய்
அவளின் வாழ்வு தொடர
என் பேச்சை மட்டும் நீ
ஏற்க வேண்டுமென -அவன்
வாய் உதற தன் பெற்றவரின்
வாழ்வை எண்ணி அவள்
வாழ்வு தொடர முடிவில்
பெற்றோரையே உதற சொல்லி
அவன் வார்த்தை செப்ப
அதை ஏற்றிடாமல் தவிப்பதும்
சீதனக்கொடுமையின் சீரழிவே…!

சீதனம் இல்லா பூமியிங்கு
சீக்கிரம் மலர வேண்டும்..
பெண் என்பவளடிமை அல்ல என
பேச்சுரை ஆற்ற வேண்டும் – மகா
பாரதியின் நிகழா கனவிங்கு
பாரின் சட்டத்தில் பதிய வேண்டும்…!

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments