சுய மரியாதை

0
1355
“அழகான அற்புதமான ஜோடி புறாக்கள்‌”​ என, ஊரே மெச்சும்‌ படி வாழ்ந்தனர்‌,​ உமா மகேஸ்வரியும்‌, சுரேந்தரனும்‌.​
“யார்‌ கண்‌ பட்டதோ”? இரண்டும்‌…​ இரு துருவங்களாக ஒரே வீட்டில்‌.​ பேசிக்‌ கொள்வதே இல்லை. ஜாடையிலும்‌, சைகையிலும்‌ நாட்கள்‌​ கடந்தன.​
சுரேந்துரனுக்கு, அலுவலக நிமித்தமாக​ சென்னை தலைமை செயலகத்குற்கு​ போக வேண்டும்‌.​
முக்கியமான பணி. 10.00 மணிக்குள்‌​ ஆஜராக வேண்டும்‌. இதை மனைவியிடம்‌ சொல்ல சுய மரியாதை​ தடுத்தது. காலையில்‌ சீக்கிரமாக​ எழுந்தால்‌ தான்‌, அடித்துப்‌ பிடித்து​ போக முடியும்‌. எட்டு மணிக்கு மேலாகி​ விட்டால்‌, ட்ராப்பிக்‌கில்‌ மாட்டி, சின்னாப்‌​ பின்னமாக, போய்‌ சேர 12.00 மணிக்கு​ மேலாகி​ விடுமே.​
இவளிடம்‌, பேசுவதில்லை. சொல்லவும்‌​ முடியவில்லையே. என்ன செய்வதென்று​ யோசித்தான்‌.​
திடீரென ஓர்‌ யோசனைத்‌ தோன்றியது.​ சரி, இப்படியே செய்யலாம்‌ என முடிவு​ செய்தான்‌.​
ஒரு தாளை எடுத்தான்‌. காலை 5.00​ மணிக்கு, என்னை எழுப்பி விடு என​ எழுதி, அவள்‌ தலையணையின்‌​ அடியில்‌ வைத்தான்‌.​
கையில்‌ கைப்பேசி இருப்பதையும்‌,​ அதில்‌ அலாரம்‌ வைப்பதையும்‌, அந்த​ டென்ஷனில்‌ மறந்தே போனான்‌.​
அவள்‌ எழுந்தாள்‌. வழக்கம்‌ போல்‌​ தலையணையை அடுக்கி வைத்து விட்டு​ செல்வது வழக்கம்‌.​
தலையணை அடியில்‌ இருக்கும்‌ சீட்டை​ எடுத்துப்‌ படித்தாள்‌. காலை 5.00 மணிக்கு எழுப்பி விடு என எழுதி இருந்ததைப்‌​ படித்தாள்‌.​
இந்த ஆளை எதற்கு நான்‌ எழுப்புவேன்‌.​ எனக்கு மட்டும்‌….மானம்‌, ரோஷம்‌​ இல்லையா? இந்த ஆளுக்கே இவ்வளவுத்‌​ திமிர்‌ இருக்கும்‌ போது, எனக்கு மட்டும்‌​ ஈனமானம்‌, சூடு சொரணை இல்லையா?​ என்ன?​
எத்தனை நாளுக்குத்‌ தான்‌, இப்படியே​ போகுமுன்னுப்‌ பார்க்கிறேன்‌. நானும்‌​ 40 பவுனோட வந்தவதா….என​ மனசுக்குள்ளே பேசிக்‌ கொண்டாள்‌.​
“அவளும்‌ ஒரு தாளை எடுத்து, மணி​ ஐஞ்சாயிடுச்சு….எழுத்துக்கோ….என​ எழுதி, அவன்‌ தலையணை அடியில்‌​ வைத்து விட்டு, குளித்து முழுகி, வாசலில்‌​ கோலமிட்டு, காப்பியை கலந்துக்‌​
குடுத்து விட்டு, அவனுக்கும்‌ பிளாஸ்க்கில்‌​ ஊற்றி வைத்து விட்டு, பூஜை அறைக்குச்‌​ சென்று விட்டாள்‌.​
அவன்‌ எழுந்திரிக்கவே இல்லை.​ ஜன்னல்‌ வழியே, சுரீல்‌ என்று, சூரியக்‌​ கதிர்கள்‌ அவன்‌ முதுகைப்‌ பதம்‌​ பார்த்தன. என்ன? உடம்பு சுடுதே​ என கண்‌ விழித்தான்‌. காலை 8.30​ மணிக்கு மேலாகி விட்டது.​
துடித்தான்‌…பதைத்தான்‌. இவ்வளவு​ நேரமா விட்டதே. இந்த டிராப்பிக்கில்‌​ எப்படி போய்‌ சேருவேன்‌…என​ அவளை முரைத்தான்‌.​
அவளும்‌, அவனுக்கிணையாக​ முரைத்து விட்டு, தான்‌ எழுதி வைத்த​ தாளை, அவன்‌ தலையணையின்‌​ அடியிலிருந்து எடுத்து நீட்டினாள்‌​ அவன்‌ எதிரில்‌.​
அவனுக்கு என்ன செய்வதென்றே​ விளங்கவில்லை.​
ஒருவருக்கொருவர்‌, ஈ.கோ.வால்‌​ இப்படி இருந்தால்‌, எந்த காரியமும்‌​ கெட்டுத்‌ தான்‌ போகும்‌.​
இருவருக்கும்‌ பேச ஆசை தான்‌.​ ஆனால்‌, யார்‌ முதலில்‌ பேசுவதென்ற​ “சுய மரியாதை” அங்கே தடுத்தது.​
அலுவலகத்திற்குச்‌ சென்றான்‌.​
அவனுடைய நல்ல நேரம்‌, மீட்டிங்‌​ அடுத்த வாரத்திற்கு தள்ளிப்‌ போட்டுள்‌ளதை, அங்கிருந்த “நோட்டீஸ்‌ போர்ட்டில்‌”………எழுதியுள்ளதை படித்தப்‌ பிறகு, அவன்‌​ நிம்மதிப்‌ பெருமூச்சு விட்டான்‌.​
வீட்டிற்கு வரும்‌ போது, கையில்‌​ மல்லிகைப்‌ பூவும்‌, அல்வாவுடனும்‌​ வந்து, தனது சுயமரியாதையைக்‌​ கொஞ்சம்‌ தளர்த்திக்‌ கொண்டு,​ 
“சாரி…செல்லம்‌, நீ முதலில்‌ பேசுவாய்‌​ என்று காத்திருந்தேன்‌” என அவனும்‌;​
 
“ஏன்‌, நீங்க முதலில்‌ பேசினால்‌ என்ன”​ என்று அவளும்‌ சினுங்க,
 
துருவங்கள்‌​ இணைந்தன “அன்பினால்‌”​ தங்களை மறந்து.​
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments