சூரிய நமஸ்காரம்

0
2545

 

Yoga

யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை. யோகா என்பது இந்தியாவின் 5000 ஆண்டு பழைமை வாய்ந்த உடல் சார்ந்த அறிவு.

“யுஜ்” என்னும் சமஸ்கிருத சொல்லில் இருந்து வந்தது யோகா என்னும் சொல்.

எந்த ஒரு ஆசனம் செய்வதற்கு முன்பும் சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் முக்கியம்.

உடல் சிறப்புற சூரிய நமஸ்காரம் என்ற ஆசனத்தில் 10 வகையில் உடல் நிலைகளை வைக்கும் ஆசனங்கள் உள்ளன.

 
Surya Namaskarasana

சூரிய நமஸ்காரம் செய்தபின் இயல்பான மூச்சு வரும் வரை ஓய்வெடுக்க வேண்டும். அதன் பின்னரே மற்ற ஆசனங்கள் செய்ய வேண்டும்.

மன அமைதி

யோகா சுவாசக் கோளாறை சரிசெய்து, மூளையையும், உடல் ஆரோக்கியத்தையும் பலப்படுத்துகின்றது. அதிலும் அன்றாடம் சிக்கலுக்குக் உள்ளாக்கப்படும் மூளையின் உட்பிரிவு சம்பந்தமான பிரச்சினைகளை சரிசெய்கின்றது.

மன அழுத்தத்தை போக்கும்

கடினமான வேலையை செய்தவுடன் யோகா செய்தால், மன அழுத்தத்தை போக்கிக் கொள்ள முடியும்.

இதயம்

யோகாவின் முலம் இதய நோய்களை கூட குணப்படுத்த முடியும். இதனால் இரத்த ஓட்டம் சீரடைந்து இரத்த அடைப்பை போக்கி ஆரோக்கியமான இதயத்தை பெற முடிகின்றது.

ஆசனங்களை முறையோடு செய்து வந்தால் உடல்வளம் பெறுவதுடன், மிகவும் சுறுசுறுப்போடும் விரைவாகவும் அன்றாட வாழ்வில் இயங்க முடியும்.

முதுகெலும்பு எளிதில் வளைந்து இயங்கும் ஆற்றலைப் பெறுவதால், எதனையும் சிறப்பாகப் பணியாற்றும் வகையில் உடலில் ஒத்துழைப்பு உயர்ந்த அளவில் கிடைக்கிறது.

பசி நன்றாக எடுக்கிறது. உடலில் பற்றிக் கொள்கின்ற நோய்கள் தொடக்க நிலையிலேயே முறியடிக்கப்படுகின்றன.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments