மூலிகையின் பெயர்: செம்பருத்தி
மருத்துவப் பயன்கள்: செம்பருத்திப்பூ பூஜைக்கு மலராகப் பயன்படுகிறது. சிவந்த நிறமுடைய பூவே சிறந்த பலன் உடையது. இது வெப்பு அகற்றிக் காமம் பெருக்கும் செய்கையுடையது. கூந்தல் வளர்ச்சிக்கு மூலிகை ஷாம்பு தயார் செய்யப் பயன்படுகிறது. இது கருப்பைக் கோளறுகள், உதிரப்போக்கு, இருதய நோய், இரத்தஅழுத்த நோய் குணமடைய பயன்படும்.
பயன்படுத்தும் முறைகள்:
- அழலை, இரத்தப்பித்தம், தாகம், பேதி, வயிற்றுக் கடுப்பு, விந்துவை நீற்றும், மேகம், விசுசி வேட்டை ஆகியவற்றிற்குப் பயன்படுகிறது. தேகவாரேக்கியம், விழியொளியும் உண்டாம்.
- பூவை நீரிட்டுக் காய்ச்சி வடிகட்டிப் பாலும் சர்கரையும் சேர்த்து காலை, மாலை அருந்த மார்புவலி, இதய பலவீனம் தீரும். காப்பி, டீ, புகையிலை தவிர்க்க வேண்டும்.
பூவை நல்லெண்ணையில் காய்ச்சி தடவ முடி வளரும். செம்பருத்தி வேர்ப்பட்டை, இலந்தை மரப்பட்டை, மாதுளம் பட்டை சம அளவு சூரணம் செய்து 4 சிட்டிகை காலை மாலை சாப்பிட பெரும்பாடு தீரும்.
- இந்தப்பூவின் கசாயத்துடன் மான் கொம்பு பற்பம் ஒரு கிராம் அளவு சேர்த்து 10-20 நாள் சாப்பிட இதயத்துடிப்பு ஒழுங்குபடும். படபடப்பு இருக்காது. குருதி தூய்மையாகும். குருதி மிகுதியாக உற்பத்தியாகும்.
- நாளும் 10 பூவினை மென்றுத் தின்று பால் அருந்தினால் நாற்பது நாளில் தாது விருத்தி ஏற்படும். நீர்த்துப்போன விந்து கெட்டி படும், ஆண்மை எழுச்சி பெறும்.
ஆண்மைக் குறைபாடு நீங்கும்
உலர்த்திய தூளும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைபாடு நீங்கும். இன்பம் நீடிக்கும்.
பூவை உலர்த்திப் பொடித்து சம எடை மருதம் பட்டைத்தூள் கலந்து பாலில் காலை மாலை பருக இதய பலவீனம் தீரும்.