ரொம்ப நாளாவே மனச உறுத்திற்று இருக்கிற விசயம் இது.
கதையள்ள படங்கள்ள இதப்பத்தி பட்டும்படாமலும் பேசிக்கிட்டாலும் வெளிப்படையா இதப்பத்தி பேசுற துணிச்சல் யாருக்கும் இல்லண்ணுதான் நினைக்கிறன்.
எனக்கும் கூட, மனசுக்குள்ள ஒரு ஓரத்தில பயம் இருக்கத்தான் செய்யுது.சரி குழப்பாம மேட்டருக்கு வாறன்.
கிட்டடில ஒரு விசயம் கேள்விப்பட்டன்.அரைகுறையா உடுத்திட்டு அன்ரோயிட் போனோட சுத்திட்டு இருக்கிற இந்த உலகத்தில சாதிவெறிபிடிச்ச சனங்களும் இருக்கென்டு.கொஞ்சம் ஆச்சரியமாவும் ரொம்பவே ஆத்திரமாவும் இருந்திச்சு.நாளடைவில அதுவ மறந்து போடும் இப்பிடி இருக்கிறவங்கள திருந்தவேமுடியாது என்டு கண்டுக்காமையே விட்டுட்டன்.ஆனாலும் சாதி சாதி என்ட வார்த்தை மட்டும் அப்ப அப்ப காதுக்க அலாரம் மாதிரி அடிச்சிட்டே இருந்திச்சு.அதால தான் இந்த சின்ன முயற்சி.எல்லாரையும் குத்தம் சொல்லனும் என்டது என்ர நோக்கமோ எண்ணமோ இல்ல.அதால இப்பவே சொல்லிற்றன் உங்களுக்கு அளவா இருந்தா மட்டும் அந்த தொப்பிய மாட்டிக்குங்க.அப்புறம் வாசிச்சுப்போட்டுஅருவாளுகள தூக்கிக்கொண்டு வீட்டுபக்கம்வந்திராதைங்கோ……
இந்த உலகம் ரொம்ப பெரிசு.அதுக்கேத்த சனத்தொகை.அங்கங்க சின்ன சின்ன கலவரங்கள் .அப்ப அப்ப மறக்கமுடியாத சில மரணங்கள்.அடிக்கடி மாற்றம் காண்ற சந்தை நிலவரங்கள்.நாளுக்கு நாள் அதிகரிக்கிற போதைப்பொருள்பாவனை…..இப்பிடி ஏகப்பட்ட விசயங்கள் பரப்பரப்பா நடந்திற்று இருக்கிறப்ப உப்பு சப்பில்லாத இந்த ஒரு விசயத்த கரகம் மாதிரி தலையில சுமந்திற்று திரியிறியளே!!! உங்களத்தான்…. மனசாட்சிய மாடு அடியோட மேஞ்சிற்றுதோ ?(ரொம்ப சாந்தமாத்தான் கேக்கிறன்)உங்க பொண்டாட்டிக்கு பிரசவம் என்டா மட்டும் கடவுள் மாதிரி தெரியுற டாக்குத்தர கூட கோயில்ல கயிறு கட்டி நிக்கவைக்கிறியள் கேட்டா வேறு சாதியெண்டு கத கதையா சொல்லுறியள்.மூண்டு வேள நீங்க கொட்டிக்கிறதுக்கு நாள்முழுக்க கஸ்ரப்படுற அந்த மனுசர நாலு பேர் சொல்லி நாறடிக்கிறியள்.இது மட்டுமா ஊரில இருக்கிற பெண்டுகள நீங்க உசார் பண்ண நாங்க கட்டாயம் வேணும். இதுதெரிஞ்சும்கூட தெருவில நிண்டு அம்பட்டன் எண்டு அழகா சொல்லுறியள்.
இல்ல தெரியாமத்தான் கேக்கிறன் நீங்கள் எல்லாம் எப்ப வாஷிங்மெஷின கண்டனியள்.நீங்க போட்ட உடுப்ப தோச்சு காயப்போடவே நாய்படா பாடு படுறியள்.அந்த நாள்ள இருந்தே நீங்க நாறடிச்சு தந்து உடுப்ப கையநோகடிச்சு அழகா தோச்சு தந்தா காதுக்கு கேக்கிறமாரி கட்டாடி எண்டுறியள். என்ன மனுசரப்பா நீங்க..
உங்கட கொப்பர் கள்ளுக்குடிக்க நாங்க பன ஏறவேணும் .களைச்சு விழுந்து இறங்கிவந்தா காப்பித்தண்ணியகூட மூக்கு பேணியிலதான் தாறியள். வெளிநாட்டுகாச வீணா செலவுபண்ணி அஞ்சாறு நாள் கூடபிணத்த வீட்டுக்குள்ள போடுவியள். மாஞ்சு மாஞ்சு நாங்க பறையடிச்சா பறப்பெடியள் என்டுறியள்,முன்னூறு ரூபாக்கே முகத்ததூக்குவியள்.
பருவக்கோளாறால உங்க சாதி பிள்ளமேல ஆசைப்பட்டு தேடிவந்து பெண் கேட்டா நாக்கில நரம்பில்லாம பேசுவியள்.நாலு நாள்ள செய்திவரும் பிள்ள லண்டனுக்கு பார்சலெண்டு.
இப்பிடிப்பட்ட உங்களத்தான் ஊர்ல நல்ல சாதி என்டு கொண்டாடினம் .எத்தின நாளைக்குத்தான் நீங்க இப்பிடி வாழப்போறியள்.வந்திருக்கிற வருத்தத்த பாத்துமா இன்னும் பாகுபாடுபாக்கிறியள்.மனசு நொந்து சொல்லுறன் நாங்களும் உங்களமாதிரி ஒரு பத்தினிக்கு பிறந்தவங்கதான். எங்கள கொண்டாடனும் என்டெல்லாம் கேக்கல ஒரு நாய் மாதிரி பாக்காதைங்கன்னு தான் கேக்கிறம்.இனியும் இப்பிடித்தான் வாழுவிங்க என்டு அடம்பிடிக்கிறதும் நாங்களும் மனுசர் தான்னு ஏத்துக்கிறதும் உங்களப்பொறுத்ததுதான் இருந்தாலும் ஒரு மாற்றத்த உங்ககிட்ட இருந்து எதிர்பாக்கிற எங்கள ஏமாத்திப்போடாதைங்கோ 😢😢😢😢(இது ஒரு உள்ளக்குமுறல்….)
Nice…