கூகுளின் ஜிமெயில் சேவை துவங்கி 15வது ஆண்டு கொண்டாட்டத்தின் அங்கமாக புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஜிமெயில் சேவையின் smart compose அம்சம் முன்பை விட மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் (email scheduling)எனப்படும் மின்னஞ்சலை நாம் விரும்பும் நேரத்தில் அனுப்பும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
smart compose என்பது machine learning தொழில்நுட்பம் மூலம் மின்னஞசல்களை டைப் செய்யும் போது பொருத்தமான வார்த்தைகளை பரிந்துரைக்கும் இதனால் மிகவேகமாக மின்னஞ்சல்களை எழுத முடியும்.
புதிய அம்சங்கள் இன்று Android தொலைபேசிகளிலும் டேப்லெட்டிலும் தொடங்கி, வரும் வாரங்களில் iOS சாதனங்களில் கிடைக்கும்.
மேலும் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் – ஃபிரெஞ்சு, இத்தாலி, போர்த்துக்கீசு மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளுக்கான வசதியை பெற்றிருக்கிறது.
ஜிமெயில் தளத்தின் புதிய அம்சங்களில் மின்னஞ்சலை schedule வசதி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனை பயன்படுத்த மின்னஞ்சலை டைப் செய்து சென்ட்(send) பட்டனை க்ளிக் செய்து மின்னஞ்சல் செல்ல வேண்டிய நேரத்தை தேர்வு செய்ய வேண்டும்.இதில் பயனர்கள் விரும்பும் நேரத்தில் மின்னஞ்சலை அனுப்ப முடியும்.இவற்றுடன் ஜிமெயில் தளத்தை விட்டு வெளியேறாமல் சில அம்சங்களை இயக்கும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
வலை பகிர்வு
நன்றி : டெக் தமிழ்.