ஞாபகம் வருதே(பள்ளிக்கூடம்)

1
1682
Img-1593022362641

நாங்க படிச்சது கவர்மென்ட் ஸ்-கூலுல…..

கைய தலைல வச்சு, கை காத தொட்டா அட்மிஸன்….

தரைல தான் இருந்து படிச்சோம்….
சிலேட் தான் எங்க அறிவு…..

குச்சி தான் எங்க எழுத்து;(ஸ்நாக்ஸ்)…

ஆங்கிலத்தை நாங்கள் படிக்கவில்லை….
அ,ஆ,இ, என்றே கல்வியைத் தொடங்கினோம்…..

வருடத்திற்கு ஒரு வகுப்புக்கு குரூப் போட்டோவும்….
தும்பி அல்லது தட்டான் பிடிப்பதும்,
மழை வந்தால் விடுமுறையும்,
நேரம் தவறாமல் ஓடிச்சென்று மணியடிக்க முந்துவதுமாக…….

சந்தோஷத்தை அனுபவித்தோம் யாம்….

சுதந்திர மற்றும் குடியரசு தின ஸ்வீட்டிலும்,
பின் உயர்நிலைபள்ளி காதலிலும்,
பள்ளி ஆண்டு விழா நிகழ்வுகளிலும்,

மகிழ்ச்சியடைந்தோம்….

இதுவுமா,

ஆசிரியரிடம் அடிவாங்கிய தருணங்கள்!
மாணவர்களுடன் சண்டையிட்ட தருணங்கள்!
பள்ளி்யில் பரிசு பெற்ற தருணங்கள்!
பள்ளியோரக் கடைகளில் தருணங்கள்!
விளையாட்டில் ஜொலித்த தருணங்கள்!
கட் அடித்து படம் பார்த்த தருணங்கள்!
வகுப்பறையில் சினிமாபாடல்புக் படித்த தருணங்கள்!

என எண்ணிலடங்கா நினைவுகளை உள்ளடக்கியது நம் பள்ளிகள் மட்டுமே!!!

3 1 vote
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
நாஞ்சில் ஹமீது
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

இப்போது நாற்பதை தொட்டவர்கள் பலரின் பிறந்தநாளை பார்த்தால் மே மாதம் தான் இருக்கும் ,அப்போது ஐந்து வயதில் தான் பள்ளியில் சேர்ப்பார்கள்.இது சான்றிதழ் பிறந்தநாள் .எனக்கும் என் மனைவிக்கும் சான்றிதழ் பிறந்தநாள் மே 20 .
ஞாபகம் வந்தது எனக்கும் உங்கள் கவிதை வரிகளை படித்தபின்.நன்றி லக்ஷ்மன்