டுட்டன்காமன் புது எகிப்திய ராஜ்ஜியத்தின், பதினெட்டாவது வம்சத்தில் வந்த பதின்மூன்றாம் மன்னன். கி.மு1342 முதல் கி.மு 1325 வரை வாழ்ந்தார் இவர். இவரது ஆட்சிக்காலம் கி.மு 1333 முதல் கி.மு 1324 வரையில்மட்டுமே இருந்தது. இவர் ஒன்பது வயதினிலேயே பார்வோன் (எகிப்திய முடி சூழ் மன்னன்)ஆனார். 19 வயது வரை உயிருடன்இருந்த டுட்டன்காமன் அமர்ந்த அரியணையின் பெயர் நெப்கெபெரூர் ஆகும். இவரது தந்தை, பார்வோன் அகேநாடென் மற்றும் அவரது தாய் “தி யங்கர் லேடி”. இவரது மனைவியின் பெயர்அங்கிஸனாமுன். துட்டன்காமன், அரசன் ஆனபிறகு தனது ஒன்றுவிட்ட சகோதரியான அங்கிசன்பாட்டெனை மணந்தார்.பின்னர் அவரது பெயரை அங்கிசனாமுன் என்று மாற்றிக்கொண்டார். இவரது ஆட்சிகாலத்தில்ஒன்பது ஆண்டு காலம் மட்டுமே உயிரோடு இருந்தார். இவரது பெயரின் அர்த்தம் ‘ஆமுன்’ கடவுளை வழிபடுபவன் என்பதாகும். டுட்டன்காமன் தனது தந்தையால் சிதைக்கப்பட்ட பண்டைய எகிப்தை மீட்டெடுத்து, முந்தைய அமர்நா காலத்தில் சேதமடைந்த பழைய நினைவுச் சின்னங்களையும் மீட்டார்.
1922ஆம் ஆண்டு, ஹவார்டு (ஓர் தொல்லியலாளர்) என்பவர், 3200 ஆண்டுகளாக மூடிக்கிடந்தமன்னன் டுட்டின் கல்லறையை கண்டெடுத்தார். அப்போது பல கேள்விகள் எழுந்து மர்மங்களானது. இன்றுவரை மன்னன் துத்தின் இறப்பும் ஓர் மர்மமாகவேஇருக்கிறது. அவரது தலையின் பின்புறமிருக்கும் துளை அவர் கொல்லபட்டிருக்கலாமென்கிறது. கால் எலும்பிலிருக்கும் உடைவு அவர் கால் உடைந்து காயம் ஆறாமல் இறந்திருக்கலாமென்கிறது. ஆனால் எதுவும் நிருபிக்கப்படவில்லை. இவரது மறுமையில் உதவுவதற்காக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட புதையல்கள், நகைகள், ரத்தினங்கள், இன்னும் பல மதிப்புமிக்க பொருட்கள் கல்லறையினுள் வைக்கப்பட்டிருந்தன. அவரது உடல் வைக்கப்பட்டிருந்த தங்க சவப்பெட்டி உள்ளிட்ட கல்லறையின் செல்வங்களை பட்டியிலடவே ஒருவாரகாலம் ஆகியிருந்தது. டுட்டன்காமன் மம்மியின் (பதனம் செய்யப்பட்ட உயிரற்ற உடல்) கண்டுபிடிப்பில் ஈடுபட்ட ஒருசிலரின் இறப்புகள் எகிப்திய பார்வோன்களின் சாபங்களினால் என்று நம்பப்பட்டுள்ளன. தாந்து அம்மைத்தழும்புகள் நிறைந்த முகத்தை மறைக்க எப்போதும் அழகிய கம்பீரமான ஒரு தங்கமுகமூடியுடனேதான் டுட் வாழ்ந்திருந்தார். அவரது மம்மியிலும் அந்த தங்க முகமூடி இருந்தது. அந்த முகமூடிக்கும் அவரது முகத்திற்கும் இருந்த இடைவெளி உண்மைக்கும் விருப்பத்திற்குமுள்ள இடைவெளி. எகிப்திய்ர்களின் பிரமிடுகளுக்குள் இப்படி ஓராயிரம் மர்மங்களும் சுவாரஸ்யங்களும் மம்மிகளுடன் சேர்ந்து புதையுண்டிருக்கின்றன. டுட்டின் மம்மியும் செல்வங்கலும் பலகோடிபேர் காணும் படி உலக ம்யூசியங்களுக்கு பயணப்பட்டுக்கொண்டிருந்தது. இப்போது எகிப்தைவிட்டு எங்கும் போகாமல் எகிப்திலேயே ஒரு அருங்காட்சியகத்தில் கண்ணாடிப்பேழைக்குள் டுட்டின் உடலும் செல்வங்களும் காட்சிக்கு வைககப்பட்டிருக்கின்றன.