டோஃபூ

0
770

 

 

 

 

 

டோஃபூ (Tofu) என்பது சோயா பயிர் விதையிலிருந்து தயாரிக்கப்படும் பாலாடைக்கட்டியினைப்போன்ற ஒரு உணவுப்பொருளாகும்.  இது சோயா தயிரென்றும் பீன்ஸ் தயிர் என்றும் அழைக்கப்படுகிறது. சின்ன சின்ன சதுரங்களாக இவை விற்பனையில் உள்ளன.

சீனா, ஜப்பான், கொரியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் உணவு வகைகளில் டோஃபு தாவர புரதத்தின் முக்கிய ஆதாரமாகும். இது ஹான் வம்சத்திலிருந்து (கிமு 206 – 220 பொ.ச.)  புழக்கத்தில் இருந்து வருகிறது என்று நம்பப்படுகிறது.

சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர் சீனாவிலும் ஜப்பானிலும் டோஃபூ வின்  உபயோகம் இருந்துள்ளது.1770 ல் டோஃபூ வைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட குறிப்புக்களும், புத்த மத துறவிகள் இதை உணவில் பெரும்பாலும் சேர்த்துக்கொண்டு இருந்ததற்கான  சான்றுகள் கிடைத்துள்ளன.

உலர்ந்த சோயாபீன்கள்  தண்ணீரில் ஊற வைக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, வேக வைக்கப்படுகிறது.  வேகவைத்த கலவையிலிருந்து சோயா பால் பிரித்தெடுக்கப்படுகிறது . சோயா பாலில், கால்சியம் சல்பேட், மெக்னீசியம் குளோரைடு. எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் சேர்த்து  அதை தயிராக்கி பின்னர் அதை கெட்டிப்படுத்தி சதுர அச்சுகளில் ஊற்றி டோஃபூ தயாரிக்கப்படுகின்றது.

 டோஃபு உற்பத்தி முறையைப் பொறுத்து  மென்மையான, கூடுதல் மென்மையான, கடினமான மற்றும் குளிர்பதனப்பெட்டிகளில் சேமிக்க தேவையில்லாத  உலர்ந்த டோஃபு ‘வாகவும் சந்தையில் கிடைக்கிறது.

 பல சுவையான உணவுப்பொருட்களைப் போன்ற டோஃபூவும் சீனாவிலிருந்தே உருவானது. 8 ஆம் நூற்றாண்டில், ஒரு சீன சமையல்காரர் தற்செயலாக சோயா பாலை தயிராக்கி இதை கண்டுபிடித்து,  ஒகாபே (Okabe)   என்று பெயரிட்டார். சீன மொழியில் ஒகாபே என்றால் வெள்ளைச் சுவர் என்று பொருள். கெட்டியாக வெள்ளையாக இருந்த டோஃப்ஃபுக்கு இந்தபெயரே வெகுகாலம் இருந்துவந்தது பிற்பாடு 19 ஆம் நூற்றாண்டில்தான்  டோஃபூ என்னும் பெயர் வழங்கப்பட்டது. டோஃபு என்பது ஜப்பானிய மற்றும் சீன மொழிகளில் பீன்ஸ் ( beans) என்று பொருள்படும்.

இதில் அதிக அளவு இரும்புச் சத்துள்ளது.ரத்தத்தில் ஹீமோகுளோபின்  அளவை அதிகரிக்க உதவுகிறது. இது ஆக்சிஜனை உடல் முழுவதும் எடுத்து செல்ல பெரிதும் உதவுகிறது. இதன் காரணமாக உடல் அதிக ஆற்றலைப் பெறுகிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கப் பயன்படுகிறது. இதயம் தொடர்பான நோய்களை தடுக்கவும் இது  உதவும். 

மிகக்குறைவான கலோரியும் அதிக அளவில் புரதம் (6-8%). இரும்புச்சத்து, மெக்னீசியம் கால்சியம்,பொட்டாசியம் உள்ளிட்ட பல தாது உப்புக்களும் அதிகம் கொண்ட இந்த டோஃபு நல்ல வாசனையையும் கொண்டது. டோஃபூ உற்பத்தியின் உபபொருட்களான   ஒகரா (Okara) என்னும் திடப்புரதமும், வே ( Whey)  எனப்படும் நீர்த்த புரதமும் உணவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.. டோஃப்ஃபுவில் மிக முக்கியமான் 8 அமினோ அமிலங்கலும் உள்ளன.

ஆசிய உணவுகளில் கடந்த 20 ஆண்டுகளாக மிக அதிக அளவில் இடம்பெற்றிருக்க்கிறது இந்த சோயாப்பன்னீரான டோஃபூ. உலகில் மிக அதிகமாக உண்ணப்படும் சோயா பொருட்களில் டோஃபூவே முதலிடம் வகிக்கிறது.   ஒரு நாளைக்கு சுமார் 50 டன் வரை   தயாரித்து  ஜப்பான்  உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறது. 

டெம்ப்பே (Tempeh) என்பதுவும் நொதித்தலுக்கு உட்படுத்தப்பட்ட சோயா விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் புரத உணவாகும். இதில் டோஃபுவை காட்டிலும் அதிக புரதமும் நார்ச்சத்தும் இருக்கிறது

சோயாவில் இருக்கும் ஒரு சில  எதிர் ஊட்டச்சத்துக்கள் (Anti nutritional substances) சோயாவை ஊற வைத்து வேக வைத்த பின்னர் டோஃபூ தயாரிக்கப்படுவதால் டோஃபூவில் இருக்காது.

உறைய வைத்த டோஃபூ, , டோஃப்ஃபூ ஊறுகாய்கள்,  சோயா பாலாடை  என பல விதங்களில் அதிக புரதம் இருக்கும் டோஃபூ உணவுகள் கிடைக்கின்றன.

சோயாவிலிருந்து மட்டுமல்லாமல் பாதாமில் இருந்து, முட்டையிலிருந்து,கொண்டைக்கடலை, வேர்க்கடலை, மற்றும் எள்ளிலிருந்தும் கூட டோஃப்ஃபூ தயாரிக்கப்படுகின்றது.

பெண்களின் மாதவிலக்கு நின்றுபோகும் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் மிக முக்கிய ஹார்மோன் உற்பத்தியும் நின்றுவிடும் எனவே பெண்கள் அப்போதிலிருந்து அதிகம் டோஃப்ஃபுச் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

 டோஃபூவில் இருக்கும் தாவர ஈஸ்ட்ரோஜன் மனித உடலின் ஈஸ்ட்ரோஜென்னை போலவே செயலாற்றுவதால் மாதவிலக்கு நின்றுபோகும் சமயங்களில் உண்டாகும் உடல் உபாதைகளில் இருந்து விடுபட  டோஃப்ஃபுவை உணவில் சேர்த்துக் கொள்வது பலனளிக்கும் என்பதால் மாதவிலக்கு நின்று போகும் காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகளில் இருந்து விடுபடலாம். உபயோகப்படுத்தாத  டோஃபுவை குளிர்பதனப்பெட்டியில் அல்லது நீரில் சேமித்து வைத்திருக்க வேண்டும்

 அசைவ புரதத்திற்கு மாற்றாக இந்த தாவர புரதமான டோஃபூவை சைவ உணவுக்காரர்கள் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments